- Advertisement -
Homeபொழுதுபோக்குசிஎம் விஜய் சார், நீங்க ரஜினி மாதிரி மாறிடுங்க, இரட்டை வேடம் போடுங்க - காமெடி...

சிஎம் விஜய் சார், நீங்க ரஜினி மாதிரி மாறிடுங்க, இரட்டை வேடம் போடுங்க – காமெடி நடிகர் கூல் சுரேஷ் சொன்னதை கேட்டு கடுப்பான தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்த நிலையில் அவரது ஆட்சி குறித்து பலவிதமான விமர்சனங்கள் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக அவரது ஆட்சியிலும் கொலை பாலியல் வன்முறை போன்ற குற்றச் சம்பவங்கள் தொடரவே செய்கின்றன. குறிப்பாக கோவையில் நடந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் முதல்வர் விஜய் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்திருந்த நிலையில் இப்போது 50 ஆயிரம் ரூபாய் கடன் மட்டுமே முழுமையான தள்ளுபடி என்றும் அதில் திருத்தம் செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் தவெக அமைச்சரவையில் உள்ள செங்கோட்டையன் அருண்ராஜ் நிர்மல்குமார் வெங்கட் ரமணன் ஆதவ் அர்ஜூனா டாக்டர் பிரபு போன்ற ஒரு சிலர் மட்டுமே ஆக்டிவ் ஆக இருந்து பல்வேறு பகுதிகளில் துறை சார்ந்த ஆய்வுகளை செய்கின்றனர். குறிப்பாக அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட மற்றவர்கள் எல்லாம் என்ன பணி செய்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காமெடி நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, விஜய் சார் உங்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டு இருக்காங்க விஜய் சார். இனி நீங்க இரட்டை வேடத்தில் இருக்கணும். நான் சிகப்பு மனிதன் படத்தை உங்கள் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார்.

- Advertisement -

அந்த படத்தில் ரஜினிகாந்த் பகலில் வாத்தியாராகவும் இரவில் தவறுகளை தட்டிக் கேட்பவராகவும் இருப்பார். அந்த மாதிரி நீங்களும் மாறனும். அப்போதுதான் நாட்டில் குற்றங்கள் குறையும் என்று நடிகர் கூல் சுரேஷ் சிஎம் விஜய்க்கு அட்வைஸ் செய்து கூறியிருக்கிறார்.

நான் சிகப்பு மனிதன் படத்தில் தனது தங்கையை கொலை செய்த வில்லன் கூட்டத்தை பழிவாங்க ரஜினி அப்படி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இரவில் வந்து வில்லன்களை சுட்டுக் கொல்வார். தமிழ்நாட்டை ஆட்சி செய்கிற முதல்வர் விஜய் எப்படி அப்படி செயல்பட முடியும்? இன்னும் முதல்வர் விஜயை சினிமா நடிகராகவே கூல் சுரேஷ் பார்க்கிறாரா என்று தளபதி ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்