கடந்தாண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இது தனுஷின் 50வது படம் என்பது மட்டுமின்றி இந்த படத்தை நடிகர் தனுஷே டைரக்ட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராயன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஆனால் அதற்கு பின் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார். ரூ. 13 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ. 8 கோடி வசூலை கடக்காமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகு தனுஷ் நடித்த குபரோ படமும் தமிழ்நாட்டில் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு நடிகர் தனுஷ் தேரோ இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர உளளது. அதே போல் நடிகர் தனுஷ் இயக்கிய நடித்த இட்லி கடை என்ற படமும் வருகிற அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் அருண்விஜய் நித்யாமேனன் பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இப்போது நடிகர் தனுஷ் போர்த்தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த படத்தின் ஷூட்டில் நடக்கிறது. இதற்காக நடிகர் தனுஷ் 80 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் தந்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் லைவ் லொக்கேஷனில் இந்த படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி நடிகர் தனுஷ், சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் இராமநாதபுரம் செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்படி அவர் மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் மதுரையில் இருந்து பாரபத்தி வழியாக தான் காரில் இராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அன்றுதான் நடிகர் விஜயின் தவெக மாநாடு அங்கு மிக பிரமாண்டமாக நடந்தது.
கடைசி நேரத்தில் மதுரையில் தவெக மாநாடு நடப்பதை தெரிந்துக்கொண்ட நடிகர் தனுஷ், தனது பயண திட்டத்தையே மாற்றி விட்டார். ஒருவேளை அவர் மாநாடு நடக்கும் பகுதி வழியாக சொகுசு காரில் சென்றிருந்தால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியிருப்பார். மேலும் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக தான் அவர் மாநாட்டுக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இதை எல்லாம் கடைசி நேரத்தில் புரிந்துக்கொண்டு தனுஷ் உஷாரான நிலையில், 22ம் தேதி அவர் மதுரை வழியாக இராமநாதபுரம் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.





