- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் சொன்ன சொல்லை காற்றில் பறக்க விட்ட நடிகர் கமல்ஹாசன், சீனியர் பாணியை ...

அந்த விஷயத்தில் சொன்ன சொல்லை காற்றில் பறக்க விட்ட நடிகர் கமல்ஹாசன், சீனியர் பாணியை பின்பற்றுவாரா நடிகர் விஜய்? – கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா என பிரபலம் கேள்வி!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எப்போதுமே உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர். தோல்வி படங்கள் தந்தாலும், அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்த தனது இடத்தை தக்க வைத்துக்கொள்பவர். நடிகர் கமல் பரீட்சார்த்த முறையில் புதிய திரைக்களங்களில் இயக்கவும், தயாரிக்கவும், நடிக்கவும் முன்வந்து பல படங்கள் பலத்த தோல்வியை சந்தித்திருக்கின்றன.

எனினும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்த பிறகு, இந்த விஷயத்தில் தெளிவாகி விட்டார். இனிமேல் வெற்றி தரும் படங்களில் மட்டுமே நடிப்பது, ரிஸ்க்கான கதைக்கள படங்களில் நடிப்பது, அத்தகைய படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.

- Advertisement -

எனினும் அவரது திடீர் அரசியல் பிரவேசம்தான் அவருக்கு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என தமிழக மக்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், திடீரென நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை மதுரையில் அறிவித்தார். அவரது கட்சியை மக்கள் ஏற்காமல் இருப்பதை ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் அவருக்கு பதில் கிடைத்து வருகிறது.

எம்பி, எம்எல்ஏ என எந்த ஒரு பதவியையும் அவரது கட்சி எந்த தொகுதியிலும் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் பெறவில்லை. இதற்கிடையே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனை, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தோற்கடித்தது இன்னும் மிகப்பெரிய பின்னடைவை அரசியலில் கமலுக்கு தந்தது. இப்போது திமுக விசுவாசியாக கமல் மாறி விட்டது காலத்தின் கொடுமையாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது பதிவு ஒன்றில் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய போது, அரசியலுக்கு வருவதால் கமல் சினிமாவில் இனி நடிப்பதில்லை என அறிவித்திருந்தார். ஆனால் கமல் நினைத்தது போல் அரசியலில் ஜெயிக்கவில்லை. அதனால் கொடுத்த வாக்கில் இருந்து பின்வாங்கி, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்று அதில் கூறியிருக்கிறார்.

அதாவது மறைமுகமாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், அரசியலில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்பதையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி ப்ளு சட்டை மாறன் இந்த பதிவில் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் விஜய் கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா என்பது போன்ற அவரது பதிவுக்கு, விஜய் அரசியலில் ஜெயிக்க போவது உறுதி என விஜய் ரசிகர்கள் பதில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்