தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள் சிலர், தலையில் ரெண்டு கொம்பு முளைத்தது போல்தான் நடந்துக்கொள்வார்கள். அறிமுக காலத்தில் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் கண்டால் பம்மிய பல ஹீரோக்கள், இன்று ஸ்டார் ஹீரோக்கள் ஆன பின்பு காட்டும் தெனாவெட்டும், கெத்தும் அவர்களுக்கு எரிச்சலை கண்டிப்பாக தரும் என்றால், வேறு வழியின்றி சகித்துக் கொள்வார்கள்.
ஆனால் அப்படி உயர்ந்த இடத்துக்கு போன பின்பும், தன்னுடைய மாஸ் பெரிய லெவலில் இருந்தும் இயக்குனர், தயாரிப்பாளரிடம் கெத்து காட்டாமல் பணிவாக நடந்துக்கொள்ளும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அந்த விஷயத்தில் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்பதை யாருமே மறுக்க முடியாது. இப்போதும் கூட ஜெயிலர் பட ஷூட்டிங்கில் டைரக்டர் நெல்சனை பார்க்கும்போதெல்லாம் எழுந்து நின்றாராம் ரஜினி.
அதே போல், சிவாஜி பட ஷூட்டிங்கில் இயக்குனர் ஷங்கர் வருவதை பார்த்ததும் கையில் இருந்த சிகரட்டை கீழே போட்டிருக்கிறார் ரஜினி. அருகில் இருந்து இதைப் பார்த்த நடிகர் மீசை ராஜேந்திரன் இந்த தகவலை ஒரு நேர்காணலில் சொல்லி ஆச்சரியப்பட்டு இருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரெஸ்ட் ரூம் செல்வதாக இருந்தாலும் கூட இப்போதும் டைரக்டரிடம் பர்மிசன் சொல்லி விட்டு செல்வதுதான் ரஜினியின் பழக்கம்.
இப்படி ரஜினிகாந்த் நடந்துக்கொள்ள காரணம், அவர் சினிமா தொழிலை தன் தெய்வமாக மதிப்பதுதான். தன்னுடைய இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்பதை மனதார உணர்ந்திருப்பதுதான். அதனால் 73 வயதிலும், தன்னை விட வயது குறைந்த இயக்குனர்களுக்கு மரியாதை தருகிறார். தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்.
ஆனால் அவரது மருமகன் தனுஷ், நடிக்க வந்த புதிதில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என விமர்சிக்கப்பட்ட அவர், இப்போது முன்னணி நடிகரான பிறகு பெரிய கெத்து காட்டுகிறார். குறிப்பாக இப்போது தினமும் ஷூட்டிங் ஸ்பாட் வரும்போது, மேக்கப் மேன் ஒருவருடன், ஹேர் டிரஸ்சரர் ஒருவரையும் தன்னுடன் அழைத்து வருகிறார். தலைமுடி சீவிவிட மேக்கப் போட மேக்கப் மேன் இருக்கையில், ஹேர் டிரஸ்சரர் என்பவர் தலைமுடி, தாடி கட்டிங் செய்பவர் தினமும் அவசியமில்லாதவர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் மேன் அடிக்கடி தனுஷூக்கு தேவைப்படுவார். அவரை அழைத்து வருவதும், தயாரிப்பாளர் அவருக்கு சம்பளம் தருவதும் நியாயம். ஆனால் ஹேர் கட் செய்பவரை தினமும் அழைத்து வந்தால், அவர் தினமும் தனுஷூக்கு ஹேர் கட் செய்யப் போவதில்லை. ஆனால் அவருக்கு தினமும் 25 ஆயிரம் ரூபாய் தண்ட சம்பளம் தந்து வருகிறார் அந்த படத்தின் தயாரிப்பாளர். இப்படி மனச்சாட்சியே இல்லாமல் தனுஷ் நடந்துக்கொள்வதை பார்த்து, பெரிய ஹீரோ என்றால் இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்யலாமா, என படத் தயாரிப்பாளர் விரக்தியில் இருக்கிறார்.





