நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிட்டவர் விஎஸ்பாபு. அந்த தொகுதியில் திமுக தலைவர் வேட்பாளர் முக ஸ்டாலினை விட அதிக ஓட்டுகளை பெற்று எம்எல்ஏ ஆனார். இவர் ஸ்டாலினை விட 8795 ஓட்டுகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலினை அவரது சொந்த தொகுதி கொளத்தூரில் தோல்வியடைய செய்த விஎஸ் பாபுவுக்கு நிச்சயமாக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால் அவரை விட வயதில் இளைய பலருக்கு அமைச்சர் பதவி தரப்பட்ட நிலையில் விஎஸ் பாபு எம்எல்ஏவாக மட்டுமே இருந்து வந்தார்.
எம்எல்ஏ விஎஸ் பாபுவுக்கு கடந்த 9ம் தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேர கண்காணப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களாக தவெக கட்சியின் மூத்த எம்எல்ஏ விஎஸ் பாபு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் தமிழக முதல்வர் தவெக கட்சியின் தலைவர் விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. மூத்த அமைச்சர்கள், முக்கிய அமைச்சர்கள் சக எம்எல்ஏக்கள் கூட யாரும் அவரது நலத்தை விசாரிக்கவில்லை.
அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து எம்எல்ஏ விஎஸ் பாபு உடல் நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி வருகிறது. மற்றபடி தவெக கட்சி தரப்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் அவரை கண்டுகொள்ளதாக தெரியவில்லை. இதற்கிடையே லண்டன் பயணம் கார் ரேஸ் வேடிக்கை என முதல்வர் விஜய் பிஸியாக இருந்து வருகிறார்.
தனது கட்சி சார்ந்த மூத்த எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடல் நலம் பாதிப்பை கூட கண்டுகொள்ளாத விஜய், தேர்தல் பிரசாரத்தில் போது உங்க விஜய் நான் வரேன், இந்த விஜய் எப்பவும் மக்களோடு ஒருவனாக இருப்பான் என்றெல்லாம் டயலாக்குகளை அள்ளி விட்டார். ஆனால் இப்போது அவரது கட்சியின் மூத்த எம்எல்ஏ உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கூட கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார். இப்படி தான் அவரது ஒவ்வொரு வாக்குறுதியும் பொய்யாக போலியாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.





