- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிலரை பயங்கரமாக டார்ச்சர் செய்திருக்கிறேன், எஸ்ஜே சூர்யா என்னை பார்த்து அப்படி...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிலரை பயங்கரமாக டார்ச்சர் செய்திருக்கிறேன், எஸ்ஜே சூர்யா என்னை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்டார் – ராயன் பட விழாவில் உண்மைகளை போட்டுடைத்த நடிகர் தனுஷ்

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய படம் ராயன், வருகிற 26ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இது தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்த தனுஷின் டைரக்‌ஷனில் உருவான 2வது படம்தான் ராயன். 3வதாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்துள்ளார்.

நடிகர் தனுஷ், இப்படி தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டுமின்றி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா டைரக்‌ஷனில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இந்த படத்துக்காக ரூ. 100 கோடி தனுஷ் சம்பளம் பெறுகிறார். இதையடுத்து வடசென்னை 2, புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னையில், ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், வேட்டி சட்டை கெட்டப்பில் அசத்தலாக வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், விழாவில் கலந்துக்கொண்டார். அவரும், தனுஷூம் இணைந்து மேடையில் ராயன் படப் பாடலை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தியது, விழாவில் வேற லெவலாக இருந்தது.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, முதல் படத்தில் நடித்த போது, நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. பல அவமானங்களை கடந்து ரசிகர்கள் முன் இன்றும் நான் நிற்க காரணம், ரசிகர்களின் கரவொலிதான். ஒல்லியாக, கருப்பாக இருந்த என்னை உங்களுடன் எப்படி கனெக்ட் செய்துக்கொண்டீர்கள் என்று தெரியவில்லை.

காளிதாஸ், சந்தீப், துஷாரா, அபர்ணா போன்றவர்களை ராயன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் பயங்கரமாக திட்டி கஷ்டப்படுத்தி இருக்கிறேன். டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் அப்படி நடந்துக்கொண்டது, அவர்களுக்கு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே, எஸ்ஜே சூர்யா, பெரிய ஸ்டார், பெரிய ரசிகர் கூட்டம் உள்ள நீங்கள் எதற்காக டைரக்ட் செய்கிறீர்கள், என்று என்னை பார்த்து கேட்டார். அந்த ஒரு வார்த்தைதான் என்னை பயங்கரமாக உழைக்க வைத்தது, என்று தனுஷ் பேசியிருக்கிறார்.

சற்று முன்