- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதைப்பத்தி இப்போதைக்கு யோசிக்க கூட நேரமில்லை - கோவையில் நடந்த கர பட விழாவில் ஓபனாக...

அதைப்பத்தி இப்போதைக்கு யோசிக்க கூட நேரமில்லை – கோவையில் நடந்த கர பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் தனுஷ்!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். திரைப்பட நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு கலைஞனாக தனுஷ் இருந்து வருகிறார். நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா அண்ணன் செல்வராகவன் இருவருமே பிரபலமான இயக்குனர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர என்ற திரைப்படம் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முதலில் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டிய நடிகர் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கிரண் – ரேவதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ப பாண்டி என்ற படத்தை இயக்கி இயக்குனராக ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பிறகு சிறிய இடைவெளி விட்ட நடிகர் தனுஷ், ராயன் என்ற படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். பிறகு தனது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் நடிகர் தனுஷ் இயக்கினார். அடுத்து இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்தார்.

இதில் ராயன் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்து நடிகர் தனுஷ் எப்போது டைரக்சன் செய்யப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு நேற்று கோவையில் நடந்த கர படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பதில் தந்திருக்கிறார்.

- Advertisement -

கோவையில் நடந்த கர படத்தின் பிரமோசன் நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசியதாவது, அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியின் ஒரு படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் அப்புறம் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் என்று மூன்று இயக்குனர்கள் எனக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதில் வடசென்னை 2 படமும் உருவாக இருக்கிறது.

இந்த படம் இந்த வரிசையில் எங்கே இடம் பிடிக்கும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படங்களை எல்லாம் நடித்து முடித்து விட்டு தான் அடுத்து டைரக்சன் பற்றி நான் மீண்டும் யோசிக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார். அதனால் குறைந்தது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நடிகர் தனுஷ் டைரக்சன் பக்கம் கவனம் செலுத்த மாட்டார். முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்