- Advertisement -
Homeபொழுதுபோக்குநட்பு என்றால் எப்படி இருக்கணும்? சொல்லுடா மச்சான்… பிரபல நடிகரை சுட்டிக்காட்டிப் பேசிய நடிகர் தனுஷ்!

நட்பு என்றால் எப்படி இருக்கணும்? சொல்லுடா மச்சான்… பிரபல நடிகரை சுட்டிக்காட்டிப் பேசிய நடிகர் தனுஷ்!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். எப்போதும் நடிப்பு இயக்கம் தயாரிப்பு என மிக பிஸியாக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகிவரும் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வரும் 21ம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் ரிலீஸாகிறது. அடுத்து அவரது இயக்கத்தில் இட்லி கடை படம் ரிலீஸாக இருக்கிறது.

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து இயக்குனர்கள் தமிழரசன் பச்சமுத்து மற்றும் விக்னேஷ் ராஜா படங்களில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே ஆங்கில படம் ஒன்றில் தனுஷ் நடிக்க உள்ளார். இளையராஜா வாழ்க்கை வரலாறு படமும் 2 பாகங்களாக உருவாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவாகவும் தனுஷ் நடிக்க உள்ளார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் கடந்தாண்டில் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். அவர்களது பிள்ளைகள் யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே பெற்றோரின் வீட்டில் மாறி மாறி இருந்து வருகின்றனர். தாய் தந்தை சட்டப்படி பிரிந்தாலும் பிள்ளைகள் இருவருக்குமே பொதுவானவர்களாக இருக்கின்றனர்.

நடிகர் தனுஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரண்ட்ஷிப் என்றால், என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது பதில் சொன்ன நடிகர் தனுஷ், பிரண்ட்ஷிப் அப்படின்னா அது ஜீவி பிரகாஷ்குமார் மாதிரி இருக்கணும் என்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரும் அமர்ந்திருந்தார். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் தனுஷ் மேடையில் பேசுகையில், எப்போது எங்கு இருந்தாலும் போன் செய்தால், உடனே சொல்லு மச்சான் என்பார். டேய் எங்கடா இருக்கே என்றால், மச்சான் கடலூர்ல ஷூட்டிங்கில இருக்கிறேன்டா என்பார். சரிடா ஒரு சாங் பண்ணனும் என்பேன். உடனே சரி மச்சான் என்று பதில் சொல்லி விடுவார். அவ்வளவுதான்.

என்ன சாங்கு என்ன பண்ணனும் எப்ப வரணும் எதுவும் கேட்க மாட்டார். எல்லாத்தையும் விட்டுட்டு டக்குன்னு ஓடி வந்துடுவார். உடனே உட்கார்ந்து பண்ணி கொடுப்பார். ஜீவி ஒரு நண்பராக, ஒரு இசையமைப்பாளராக அவருக்கு நன்றி சொல்கிறேன். ஐ லவ் யூ ஜீவி என்று அந்த மேடையில் மிகவும் வெளிப்படையாக நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்