- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ்… சொன்ன விஷயத்தை அவரே முன்...

இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ்… சொன்ன விஷயத்தை அவரே முன் உதாரணமாக செய்தும் காட்டீட்டாரே?

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் தனுஷ் நடிகை நித்யாமேனன் மற்றும் நடிகர்கள் சத்யராஜ் ராஜ்கிரண் பார்த்திபன் அருண்விஜய் ஜீவி பிரகாஷ்குமார் மற்றும் கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

ஏற்கனவே ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியவர் நடிகர் தனுஷ். இப்போது 4வது படமாக இட்லி கடை படத்தை அவர் டைரக்ட் செய்திருக்கிறார். ராயன் படத்துக்கு பின் குபேரா நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் சரியாக போகாத நிலையில் இட்லி கடை படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது, நாம் எப்போதும் நம் முன்னோர்களை மறந்துவிடக் கூடாது. பாட்டன் பூட்டன் வாழ்க்கையை எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் நமக்கு குறைவுதான். என்றாலும் நாம் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருளும் ஆசியும் நமக்கு மிகவும் முக்கியம் என்று அந்த விழாவில் நடிகர் தனுஷ் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

வருகிற அக்டோபர் 1ம்தேதி இட்லி கடை படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது தந்தை கஸ்தூரிராஜா மகன்கள் லிங்கா யாத்ரா மற்றும் குடும்ப உறவினர்களுடன் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் தனது குலதெய்வ கோவிலான கருப்பசாமி சுவாமியை வழிபட குடும்பத்துடன் வந்தார்.

- Advertisement -

கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் அமர்ந்து நடிகர் தனுஷ் பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு தனது பெற்றோரின் காலில் விழுந்து நடிகர் தனுஷ் ஆசி பெற்றார். அதிகாலை நேரத்தில் பாதுகாவலர்களுடன் கேரவனில் வந்து வழிபாடு செய்த பின்னர் அங்கிருந்து தனுஷ் குடும்பத்தினர் புறப்பட்டு சென்றனர்.

நடிகர் தனுஷ் வருகை குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். அவர்களுக்கு கையசைத்தபடியே நடிகர் தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இட்லி கடை பட விழாவில் குலதெய்வம் கோவிலுக்கு அனைவரும் தவறாமல் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், அதை முன் உதாரணமாக சில நாட்களில் செய்து காட்டியது ரசிகர்களிடம் பெரிய கவனம் பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்