தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராக தயாரிப்பாளராக பாடகராக பல பரிமாணங்களை தனுஷ் காட்டி வருகிறார். தமிழில் மட்டுமின்றி இந்தி ஹாலிவுட் படங்களிலும் தனுஷ் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை என 4 படங்களை தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஆன நிலையில் அவரை தனுஷ் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்கிற அடையாளத்தை அவர் இழந்த போதிலும் தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக இருக்கும் நிலையில் தன்னை ஒரு நட்சத்திர இயக்குனராக காட்டவும் அவர் உழைத்து வருகிறார்.
ராயன் படம் அளவுக்கு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஆதரவை பெறவில்லை. குறிப்பாக இட்லி கடை படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் அருண்விஜய் இளவரசு போன்ற நட்சத்திர கலைஞர்கள் இருந்தும் அந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.
எனினும் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் கடைசியாக தமிழில் வெளியான படம் இட்லி கடை தான். இது அவர் இயக்கிய 4வது படமாகும். இந்த படத்துக்கு பிறகு தனுஷ் நடித்த தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படம் வெளியாக நல்ல வசூலை பெற்றது. தொடர்ந்து நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங் பேசியுள்ளனர். நடிகர் தனுஷ் பொங்கலுக்கு பிறகு இந்த படத்துக்கான பர்ஸ்ட் ஹாப் டப்பிங் மற்றும் செகண்ட் ஹாப் டப்பிங் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் ஏற்கனவே நடிகர் தனுஷ் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது.





