- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த ஜென்மத்துல பாம்பா பொறந்தா கூட நான் அதை செய்ய மாட்டேன், வளைஞ்சு நெளிஞ்சு அப்படியே...

அடுத்த ஜென்மத்துல பாம்பா பொறந்தா கூட நான் அதை செய்ய மாட்டேன், வளைஞ்சு நெளிஞ்சு அப்படியே போயிடுவேன் – நடிகர் கஞ்சா கருப்பு ஏன் இப்படி சொல்றாரு?

- Advertisement -

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் படங்களில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். டைரக்டர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். அதன்பின் அமீர் இயக்கத்தில் ராம் படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். இதில் ஆளவந்தான் கேரக்டரில் போலீஸ் ஸ்டேஷனில் அவரது நகைச்சுவை காட்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் கஞ்சா கருப்பு நடித்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார். தாமிரபரணி, நாடோடிகள், களவாணி குறிப்பாக சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அறை எண் 305ல் கடவுள் போன்ற படங்கள் கஞ்சா கருப்புவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன.

- Advertisement -

இதில் அறை எண் 305ல் கடவுள் படத்தில் நடிகர் சந்தானம், கஞ்சா கருப்பு இருவரும்தான் ஹீரோக்களாக நடித்திருந்தனர். அந்தளவுக்கு கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவுக்கு முக்கிய நடிகராக மாறினார். இப்போதும் இறைவன் மிகப்பெரியவன், நல்லது செய்ய போறோம், ஓம்காளி ஜெய்காளி, சபரி ஐயப்பா போன்ற படங்களில் கஞ்சா கருப்பு பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சினிமா வாய்ப்புகள் இடையில் குறைந்த போது, 2 ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு கலந்துக்கொண்டார். அப்போது நடிகர் பரணிக்கும், இவருக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வைரலானது. பிக்பாஸ் வீடு குறித்து வெளியே வந்தபின் கடுமையான விமர்சித்து வருகிறார் கஞ்சா கருப்பு.

- Advertisement -

நிறைய படங்களில் நடித்த கஞ்சா கருப்பு, ஒருகட்டத்தில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற சொந்த படத்தை எடுத்தார். அங்காடித்தெரு நாயகன் மகேஷ்தான், இந்த படத்திலும் ஹீரோவாக நடித்தார். படம் செம பிளாக் ஆகி கஞ்சா கருப்புவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இன்று வரை அந்த படத்துக்காக வாங்கிய கடனை திருப்பி கட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

சமீபத்தில் இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், என் சினிமா வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு சொந்தமாக படம் எடுத்ததுதான். அடுத்த ஜென்மத்துல பாம்பா பிறந்தா கூட நான் படம் எடுக்க மாட்டேன். அப்படியே வளைஞ்சு, நெளிஞ்சு போயிடுவேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள ரெண்டு நாள் கெஸ்ட்டா வேணா போய் தங்கீட்டு வருவேன். அந்த வீட்டுல ரொம்ப நாள் எல்லாம் என்னால இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் கஞ்சா கருப்பு.

- Advertisement -

சற்று முன்