நடிகர் கவின், சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அவரது திரைப்பட வாய்ப்புகள் வந்தன.
கவின் நடித்த டாடா மற்றும் லிப்ட் ஆகிய 2 படங்களும் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்து, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. இன்னும் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. இதற்கிடையே இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் எஸ்ஜே சூர்யா நடிக்கும் ஒரு படத்திலும் கவின் கமிட் ஆகி உள்ளார்.
டாடா மற்றும் லிப்ட் ஆகிய இரண்டு படங்கள் தந்த வெற்றியை அடுத்து இப்போது சில கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் கவின். அதனால் தமிழ் சினிமாவில் அவரது ஸ்டேட்டஸ் ஒரு முன்னிலைக்கு வந்திருக்கிறது. வளர்ந்துவரும் இளம் நடிகராக இன்னும் பல படங்களில் நடிக்கவும் அவருக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் நடிகர் கவின் செய்யும் அலப்பரைகளை தாங்க முடியாமல் படக்குழுவினர் நொந்து போகின்றனர். அப்படி இருந்த கவின் இப்படி மாறிவிட்டாரே என புலம்பும் அளவுக்கு அவரது தெனாவெட்டான நடவடிக்கைகள் பலரையும் எரிச்சலடைய வைக்கிறது.
அதாவது குறித்த நேரத்தில் ஷூட்டிங்குக்கு வராமல் தாமதமாக வருவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த காட்சி இப்படி இருக்க வேண்டும், அந்த காட்சி அப்படி இருக்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிசன் போடுவது அவரிடம் அதிகரித்து வருகிறது. அவரது டார்ச்சர் தாங்க முடியாத அளவுக்கு எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.
வளரும் நடிகராக போராடி, தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் கவின். நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் நடித்தால் தொடர்ந்து முன்னணி நடிகராக வளர முடியும். ஆனால் வளர ஆரம்பித்த உடன், சினிமாவில் ஒரு குறிப்பிடும்படியான இடத்துக்கு வந்தவுடன் அவர் இப்படி நடந்துக்கொள்வது, அடுத்த படங்களில் நடிக்க, இவருக்கு பதிலாக வேறு ஒரு புதுமுகத்தை தேடும் நிலையை அவரே உருவாக்கி விடுவார் என்பதில் சந்தேகமில்லை.





