- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா, வளரும் இளம் நடிகர் கவின் எடுக்கும் அடுத்த அவதாரம் - இதை...

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா, வளரும் இளம் நடிகர் கவின் எடுக்கும் அடுத்த அவதாரம் – இதை தான் எங்கேயோ மச்சமுன்னு சொல்வாங்களா?

- Advertisement -

நடிகர் கவின், துவக்கத்தில் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். அதில் அவர் ஏற்று நடித்த வேட்டையன் என்ற கேரக்டர், ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கவின் கலந்துக்கொண்டார். இதில் தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து, ஓடிடியில் அவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் படம், திரில்லர் படமாக இருந்து, அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து, அப்பா – மகள் பாசத்தை மையப்படுத்திய டாடா படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, கவின் ஒரு நடிகராக ரசிகர்களின் மனதை வென்றார்.

- Advertisement -

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்திலும், அவரது நடிப்பு குறை சொல்ல முடியாத அளவுக்கு, ரசிகர்களை வசீகரித்தது. ஆனால் படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு, படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. என்றாலும், கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

இப்போது கவின் கிஸ், பிளடி பெக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகம் எடுக்கப்படுகிறது. இந்த படம், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். நடிகர் சூரிக்கும், காமெடியில் மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்த படமாக இருந்தது.

- Advertisement -

இந்த படத்தின் 2ம் பாகத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிகர் கவின் நடிக்கிறார். அதே போல் இப்போது லேட்டஸ்ட் தகவலாக, சில்லுன்னு ஒரு காதல் என்ற படம் 2ம் பாகமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்திலும் கவின் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டில் வெளிவந்த இந்த படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு காதல் படமாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 2ம் பாகத்தில் கவின் நடிக்கிறார். இப்படி நட்சத்திர நடிகர்களின் ஹிட் படங்களில், 2ம் பாகத்தில் நடிக்க கவினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்