- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபு மருமகனாக போவது இந்த இளம் டைரக்டரா? - அதுவும் காதல் திருமணம், கல்யாண...

நடிகர் பிரபு மருமகனாக போவது இந்த இளம் டைரக்டரா? – அதுவும் காதல் திருமணம், கல்யாண தேதி கூட பிக்ஸ் பண்ணிட்டாங்க – களை கட்டப் போகுது அன்னை இல்லம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலை கழகம், செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் இளைய திலகம் நடிகர் பிரபு என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தந்தையை போலவே, மகனும் ஹீரோவாக நடித்து பல வெற்றிப்படங்களை துவக்கத்தில் கொடுத்தார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக டிவி சேனல்களில் விளம்பரங்களில் நடிகர் பிரபு அதிகளவில் தோன்றுகிறார். 1990களில் தமிழ் சினிமாவில் பிரபு, குஷ்பு என்றொரு காலம் இருந்தது. அப்போது அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த படங்கள் என்றாலே, அது பெரும்பாலும் சில்வர் ஜூப்ளி படங்களாக தான் இருந்தன.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் பிரபு, குஷ்பு ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதிலும், அதற்கு பிறகு பிரபுவின் சினிமா மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்து விட்டது. மற்ற நடிகர்களின் படங்கள் அதிக நாட்கள் ஓட, பிரபு பின்னோக்கிச் சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் நல்ல அறிமுகத்தை, வரவேற்பை பெற்ற விக்ரம் பிரபுவுக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் அமையவில்லை. சில படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. எனினும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பிரபுவின் மகள், விக்ரம் பிரபுவின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என இரண்டு தரப்பிலும் முடிவு செய்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

அன்னை இல்லத்தில், நடிகர் பிரபுவின் மருமகனாக போகிறவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான். அதாவது மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய இயக்குநர்தான். பிரபுவின் மகள் பேஷன் டிசைனர் என்று கூறப்படும் நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம், நட்பாகி அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்து, பெற்றோர்கள் முன்னிலையில், இந்த காதல் திருமணம் வரும் டிசம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. அஜீத்குமார் படத்தை டைரக்ட் செய்யப் போகிற ஒரு சூழலில், நடிகர் பிரபு வீட்டில் மருமகனாக இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

- Advertisement -

சற்று முன்