- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டிய நடிகர் கவுண்டமணி, என்னோட காமெடி ரோலை ரஜினிக்கு கொடுங்க என்று...

சம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டிய நடிகர் கவுண்டமணி, என்னோட காமெடி ரோலை ரஜினிக்கு கொடுங்க என்று தயாரிப்பாளரிடமே தில்லாக சொல்லி இருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விசு போலவே குடும்ப படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி சேகர். இவர் இயக்கிய பல படங்களில் கவுண்டமணி செந்தில் காமெடி ரோலில் நடித்திருக்கின்றனர். பல படங்களில் ஹீரோவை விட கவுண்டமணிக்குதான் படத்தில் அதிக முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அந்த படத்தின் வெற்றிக்கு கவுண்டமணியே பக்கபலமாக இருப்பார்.

நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வி சேகர் கவுண்டமணி குறித்து கூறியதாவது, ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற படத்தில் சுடுகாட்டு வெட்டியான் கேரக்டரில் கவுண்டமணி நடித்தார். அதுபோன்ற கேரக்டரில் நடிக்க பலரும் யோசிப்பார்கள். ஆனால் கவுண்டமணி துணிச்சலாக நடித்தார்.

அந்த படத்தில் நடித்த போது, கவுண்டமணியின் ஒரு நாள் சம்பளம் 2 லட்சம் ரூபாயாக இருந்தது. முதலில் 15 நாட்கள், பிறகு 40 நாட்கள் வரை அவர் கால்ஷீட் தந்தார். நான் சம்பளமாக 5 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தேன். அதே நேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் எஜமான் படம் தயாரிக்கப்பட்டது.

அந்த படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் கவுண்டமணி, 15 நாட்களுக்கு சம்பளமாக 50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு ஏவிஎம் தயாரிப்பாளர்கள், வி சேகர் இயக்கிய படத்தில் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி நடித்திருக்கிறீர்கள். எங்கள் படத்தில் நடிக்க 15 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

அதற்கு கவுண்டமணி, இது ரஜினி நடிக்கிற படம். பெரிய அளவில் வியாபாரம் ஆகும். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன். இந்த படத்தில் ரஜினிதான் ஹீரோ. நான் அல்ல. வேண்டுமானால் என்னோட காமெடி ரோலில் ரஜினி நடிக்கட்டும், அவரது ஹீரோ கேரக்டரில் நான் நடிக்கிறேன். அப்படி என்றால் நீங்கள் சொன்ன சம்பளம் வாங்கிக்கொள்கிறேன்.

வி சேகர் படத்தில் நான் நடித்தால் அந்த படத்தில்தான் நான்தான் ஹீரோ. நான்தான் அங்கு ரஜினி. அந்த படத்தின் கதையில் முழுக்க முழுக்க எனக்குதான் முக்கியத்துவம் இருக்கும். அதனால் அதற்கேற்ப சம்பளத்தை விட்டுத் தருகிறேன், என்று தடாலடியாக பேசி சம்பளத்தை விட்டுத் தராமல் இருந்திருக்கிறார். நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் பணிசெய்தவன் என்பதால் இந்த தகவல் எனக்கு கிடைத்தது. என் படத்துக்காக மிகவும் ஒத்துழைப்பு தந்தவர் கவுண்டமணி. அவர்தான் இன்னொரு சூப்பர் ஸ்டார் என்று இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.

சற்று முன்