- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் வழியில் சிவகார்த்திகேயன்.... இவர் வழியில் தனது சினிமா பயணத்தை தொடரும் இளம் நடிகர்...

நடிகர் விஜய் வழியில் சிவகார்த்திகேயன்…. இவர் வழியில் தனது சினிமா பயணத்தை தொடரும் இளம் நடிகர் – அதுக்காக அத்தனை கோடிகளை செலவழிப்பது சரிதானா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக டாப் 10ல் ஒருவராக வலம் வருகிறார். கடந்தாண்டில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், இப்போது அவரது சம்பளம் 70 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இலங்கையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் அதர்வா ரவிமோகன் குரு சோமசுந்தரம் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். மேலும் மலையாளத்தில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள பசில் ஜோசப் இந்த படத்தில் அறிமுகமாகிறார். இதுவும் அமரன் படம் போலவே, மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரது பயோபிக் கதையாக உள்ளது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் துவக்கத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோ காம்பியராக இருந்த பிறகு மெரினா படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் மனம் கொத்திப் பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் எதிர்நீச்சல் ரெமோ ரஜினிமுருகன் காக்கிச்சட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

அடுத்து வேலைக்காரன் நம்மவீட்டுப் பிள்ளை டாக்டர் அயலான் மாவீரன் படங்களில் நடித்து பெரிய நடிகராக மாறிய நிலையில் அமரன் படம் அவரை முன்னணி நடிகராக்கி உளளது. அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் அடுத்து குட் நைட் பட இயக்குனர் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனை பொருத்த வரை தனது படங்கள் பெரிய வரவேற்பை வெற்றியை பெற அதிக செலவு செய்வார். தனது சம்பளத்தை விட படத்துக்கான தயாரிப்பு மற்றும் விளம்பர செலவுகளில் அதிக கவனம் செலுத்துவார். இதனால் ரூ. 75 கோடி வரை அவர் கடனாளியாகி ஒரு கட்டத்தில் பல சிரமங்களை, நெருக்கடிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பல விஷயங்களில் நடிகர் விஜயை சிவகார்த்திகேயன் பின்பற்றி வருகிறார். அதனால் அடுத்த விஜய் என்றும் சிவகார்த்திகேயனை கூறி வருகின்றனர்.

இப்போது பார்க்கிங் லப்பர் பந்து படங்களின் மூலம் பெரிய வரவேற்பை அங்கீகாரத்தை பெற்றுள்ள வளரும் இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகர் சிவகார்த்திகேயனை தனது திரையுலக பயணத்தில் அப்படியே பின்பற்றுகிறார். அவரை போலவே படத்தின் கதைகளை தேர்வு செய்கிறார். ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் டீசல் படத்துக்கு ரூ. 24 கோடி வரை செலவு செய்திருக்கிறார். 120 நாள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அவரது அப்பா தயாரிப்பாளர் என்றாலும் இப்படி செலவழிப்பது சரிதானா என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்