- Advertisement -
Homeபொழுதுபோக்குஒண்ணும் பிரச்னை இல்லே, இப்படியே போய்ட்டு வாங்க, தைரியமாக நாயகனை பொது நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்த...

ஒண்ணும் பிரச்னை இல்லே, இப்படியே போய்ட்டு வாங்க, தைரியமாக நாயகனை பொது நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்த டைரக்டர் – தயங்கியபடி வந்த ஹீரோ

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சிலர் தவிர, மற்றவர்கள் சினிமா தவிர்த்து மற்ற சில தொழில்களில் ஆர்வம் காட்டுகின்றனர். சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, வேறு தொழில்களில் முதலீடு செய்கின்றனர். நகைக்கடை, ஜவுளிக்கடை, தொழில் நிறுவனங்கள், மொபைல் ஷோரூம், புதிய வாகனங்கள் விற்பனையாளர் என, பல வணிகங்களில் ஈடுபடுகின்றனர். இதில் பெரிய ஸ்டார்களும் உள்ளனர்.

அதுபோல் சமீபத்தில், இயக்குநர் அமீர் புதியதாக ஓட்டல் ஒன்றை திறந்திருக்கிறார். இது காபி ஷாப் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு காபி ஷாப், அவர் சொந்தமாக திறந்திருப்பதாகவும் தெரிகிறது. சினிமாவை போலவே, இப்போது ஓட்டல்கள், இதுபோன்ற லேட்டஸ்ட் காபி, டீ ஷாப்கள் அதிக வருமானம் தருபவையாக இருப்பதால், வருமானம் மட்டுமின்றி, பல பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

- Advertisement -

அதுபோல், சென்னையில் சமீபத்தில் தனது ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்றார் இயக்குநர் அமீர். அவர் பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த அடுத்த 10 நிமிடங்களில், அங்கு புது கெட்டப்பில் ஒருவர் வந்து சேர்ந்தார். காரை விட்டு இறங்கிய அவரை, ரசிகர்கள் புடைசூழ பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

அருகே வந்த அந்த நடிகரை இயக்குநர் அமீர், கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரவேற்றார். அவர், மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. சைடு வகிடு எடுத்து சீவிய தலையும், சோடாபுட்டி போன்ற கண் கண்ணாடியும், குறிப்பாக நாவலர் நெடுஞ்செழியன் போன்ற மீசையும் வைத்த நிலையில், விஜய்சேதுபதி மிக வித்யாசமான கெட்டப்பில் காணப்பட்டார்.குறிப்பாக அவரது உடல் எடை 10 முதல் 15 கிலோ வரை குறைந்த நிலையில் இருந்தார்.

- Advertisement -

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது விஜய் சேதுபதி, நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதும் ஷூட்டிங்கில்தான் இருந்தேன். அமீர் எனது நெருங்கிய, எனக்கு பிடித்தமான நண்பர். அவர் அழைத்ததால், இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துக்கொண்டேன். படத்தில் நடிக்கும் இந்த கெட்டப்பில் இருப்பதால், நிகழ்ச்சிக்கு போகலாமா எனக் கேட்டேன். அதற்கு டைரக்டர், ஒண்ணும் பிரச்னை இல்லே, இப்படியே போயிட்டு வாங்க என்று என்னை அனுப்பி வைத்தார், என்றார்.

தொடர்ந்து கேள்விகள் எழுப்பிய செய்தியாளர்களிடம், என்னிடமும், விஜய் சேதுபதியிடமும் நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கின்றன. ஆனால், இப்போது வேண்டாம். இன்னும் 10 நாட்களில் அடுத்த பிரஸ்மீட் வைக்கும்போது பேசிக்கொள்ளலாம், என அமீர் முடித்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜய் சேதுபதியை, படத்தில் நடிக்கும் கெட்டப்புடன் அனுப்பி வைத்தது, இயக்குநர் வெற்றிமாறன். அவர் இப்போது நடித்துவரும் படம் விடுதலை 2 என்பதும்தான் இதில் ஹைலைட்.

- Advertisement -

சற்று முன்