- Advertisement -
Homeபொழுதுபோக்குவெகுளித்தனமாக பேசிய வசனம் அது… படத்தில் தெரியாமல் பேசி விட்டேன் - திமுகவை கலாய்த்த நடிகர்...

வெகுளித்தனமாக பேசிய வசனம் அது… படத்தில் தெரியாமல் பேசி விட்டேன் – திமுகவை கலாய்த்த நடிகர் ஜீவா தந்த பதிலிலும் கிண்டல் தெரிகிறதே…?

- Advertisement -

சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களில் பராசக்தி வா வாத்தியார் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. ஆனால் சத்தமே இல்லாமல் திரைக்கு வந்த நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடந்த 15ம் தேதி வெளியான இந்த படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா இளவரசு பிராத்தனா நாதன் ஜெய்வந்த் ஜென்சன் திவாகர் மணிமேகலை சர்ஜின் குமார் ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். டிடிடி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தை மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் டைரக்ட் செய்து இருக்கிறார்.

- Advertisement -

அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது இந்த படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 15 கோடி ரூபாய் வசூல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்த ஒரு காட்சியில் படிச்சு படிச்சு சொன்னேன்டா கண்டிஷனை பாலோ பண்ணுங்க கண்டிஷனை பாலோ பண்ணுங்கன்னு. கேட்டீங்களா என்ற வசனம் இடம் பெற்றது.

இந்த வசனம் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அதே சமயம் அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனென்றால் கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய வார்த்தைகள் தான் இது. அந்த நேரத்தில் அவர் பேசியதை கிண்டல் செய்வது போல இந்த படத்தில் ஜீவா அந்த வசனத்தை பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் டிடிடி படங்கள் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் நடிகர் ஜீவா திடீர் விசிட் செய்து வருகிறார். அப்போது பொள்ளாச்சியில் உள்ள ஒரு தியேட்டருக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டனர். அதற்கு நடிகர் ஜீவா கூறியதாவது, ட்ரெண்டிங் என்கிற விஷயத்துக்கு ஏற்றது போல் தான் எல்லாமே செய்து வருகிறோம். டைரக்டர் தான் அந்த இடத்தில் இந்த வசனத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நானும் அதை வெகுலியாக பேசி விட்டேன். அதற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்தது.

மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. முழுக்க முழுக்க பொழுதுபோக்காகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது என்று ஜீவா விளக்கம் கூறியிருக்கிறார். ஒரு ஆளுங்கட்சி அமைச்சர் பேசியதை மக்கள் மத்தியில் ட்ரெண்டிங்கான ஆன அந்த வார்த்தைகளை, நடிகர் ஜீவா திரையில் கிண்டலாக பேசிவிட்டு இப்போது வெகுளித்தனமாக பேசிவிட்டேன் என்று சமாளித்து கூறுவதும் கிண்டலாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்