- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது வெட்கக்கேடான ஒரு விஷயம், வக்கிரத்தின் வெளிப்பாடு, அவர்களை சும்மா விடமாட்டேன் - நடிகர் ஜூனியர்...

இது வெட்கக்கேடான ஒரு விஷயம், வக்கிரத்தின் வெளிப்பாடு, அவர்களை சும்மா விடமாட்டேன் – நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆவேசம்!

- Advertisement -

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் என்பது மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. கல்வி தொழில் வணிகம் வியாபாரம் சினிமா என பல துறைகளிலும் அதன் செயல்பாடு பெரிய அளவில் மக்களுக்கு உதவி வருகிறது. எனினும் இதை தவறாகவும் பலர் பயன்படுத்துவது தொடர்கிறது.

குறிப்பாக பெண்களை குறிவைத்து இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் கவர்ச்சியாக மிகவும் ஆபாசமான காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த வீடியோக்கள் ரீல்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் பிரபல நடிகைகளும் அடிக்கடி சிக்கி கொள்கின்றனர். அவர்களை ஆபாசமாக சித்திரித்து ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான காட்சிகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிகை ஜான்விகபூர் நடிப்பில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் சமீபத்தில் வெளியான படம் தேவரா. இந்த படத்தில் சுட்டமல்லி என்ற பாடல் கட்சியில் இடம் பெற்ற ஜான்வி கபூரை செயற்கை நுண்ணறிவு ஏஐ மூலம் தவறாக எடிட் செய்து இணையதளங்களில் பரப்பியதற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியிருப்பதாவது, ஏஐ தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ மிகவும் அருவருப்பானது. வக்கிரமானது மற்றும் வெட்கக்கேடானது. பெண்களை தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் தேசம் இது. தாயே தெய்வம் என்பது வெறும் வாசகம் மட்டும் அல்ல. நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணை மிகவும் இழிவான முறையில் அவமதிக்க சிலர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்து போய் உள்ளனர். இவ்வளவு மோசமான ஒன்றை உருவாக்க ஏஐயை பயன்படுத்துவது வெட்கக்கேடானது. இதை உருவாக்கிய யாரையும் சும்மா விடமாட்டேன். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பேன். தயவு செய்து இதுபோன்ற உள்ளடக்கத்தை பார்க்கவோ பகிரவோ வேண்டாம்.

இன்று இது வேறொருவருக்கு நடக்கலாம். நாளை இது உங்கள் சகோதரி தாய் மனைவி அல்லது மகளுக்கு கூட நடக்கலாம். இது ஒரு தீவிரமான பிரச்சனை. ஏஐயின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான விதிமுறைகள் கொண்டு வருமாறு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும் இந்திய அரசையும் வலியுறுத்துகிறேன் என்று அதில் நடிகர் ஜூனியர் என்டிஆர் கோபமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்