- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னுமா படப்பிடிப்பு முடியலே…. திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நடிகர் விஜய் - தரமான சம்பவத்துக்கு...

இன்னுமா படப்பிடிப்பு முடியலே…. திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நடிகர் விஜய் – தரமான சம்பவத்துக்கு தயாரான இயக்குனர் வெங்கட்பிரபு!

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் கோட் ( தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்). இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது.

தொடர்ந்து திருவனந்தபுரம், சென்னை, ஹைதராபாத், துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த கோட் படப்பிடிப்பு ஏறக்குறைய 99 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா, மகன் என்ற கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு சினேகா, மீனாட்சி சவுத்ரி என்ற 2 கதாநாயகிகள் ஜோடியாக நடித்துள்ளனர்.

மேலும் கோட் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் ரீ என்ட்ரி தந்துள்ளார். அதே போல் நடிகர் மைக் மோகன், கோட் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். பிரபுதேவா, சுதீப், கஞ்சா கருப்பு, வைபவ், ரம்யா கிருஷ்ணன், கனிகா, லைலா என பல முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏழு மாதங்களாக நடந்து வந்த நிலையில் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இந்த சூழலில் இப்போது, கோட் படத்தின் டீஏஜிங், விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடக்கின்றன. இதற்காக கோட் படத்தின் சிஜி டீம் கடந்த வாரத்தில் திங்கட்கிழமை அன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை டைரக்டர் வெங்கட் பிரபு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இதை தொடர்ந்து சனிக்கிழமை நடிகர் விஜய் அமெரிக்காவும் சென்றிருக்கிறார்.

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிஜி தொழில்நுட்ப ஸ்டுடியோவில், தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டீ ஏஜிங் தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. அதில் விஜய் பிரத்யேக சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். வரும் 14ம் தேதி வரை இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் விஜய், அதன் பிறகு 15 அல்லது 16ம் தேதி சென்னைக்கு திரும்புகிறார். இன்னும் 2 வாரங்கள் அமெரிக்காவில் தங்கும் இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் தொழில்நுட்ப பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு பிறகுதான் சென்னை திரும்புகிறார்.

கோட் படம் டைம் ட்ராவல் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இந்த படத்தில் நிறைய விஷயங்கள் தொழில்நுட்ப அடிப்படையில் செய்யப்பட்டு இருக்கின்றன. டீ ஏஜிங், விஎப்எக்ஸ் என படம் முழுக்க தொழில்நுட்ப பணிகள் அதிகம் இருப்பதால், அந்த பணிகளை அமெரிக்காவில் முடித்து மிக தரமான ஒரு படமாக கோட் படத்தை வெளியிட இயக்குனர் வெங்கட் பிரபு இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

சற்று முன்