- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்கிரிப்ட்டுல அது இல்லே, ஆனா அந்த சீன்ல நான் கமலை திட்டி பேசிட்டேன், டைரக்டரே கைதட்டி...

ஸ்கிரிப்ட்டுல அது இல்லே, ஆனா அந்த சீன்ல நான் கமலை திட்டி பேசிட்டேன், டைரக்டரே கைதட்டி சிரிச்சுட்டார் – நடந்த சம்பவத்தை சொன்ன இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கே பாக்யராஜ் பேசியதாவது, 16 வயதினிலே படத்துல கமல் ஸ்ரீதேவி இருக்கிற சீன்ல நான் நடிக்கணும்ன்னு எங்க டைரக்டர் சொல்லிட்டார். உடம்புக்கு சரியில்லாம நெத்தியில் பத்து போட்டுட்டு ஸ்ரீதேவி இருப்பாங்க. அவங்களுக்கு வைத்தியம் பார்க்கற வயசான வைத்தியர் கேரக்டர்ல நான் நடிக்கணும்னு சொல்லிட்டார்.

அந்த வைத்தியர் வந்து மருந்து மாத்திரை எல்லாம் சப்பாணிகிட்ட கொடுத்துட்டு, இதை எல்லாம் சரியான நேரத்துல கொடு. இதுவரைக்கும் மயிலு அம்மாவுக்கு ஒத்தாசையா இருந்தே. இனிமே நீதான் மயிலுக்கும் ஒத்தாசையா இருக்கணும், நான் காலம்பற வந்து பார்க்கறேன்னு டயலாக் பேசிட்டு போகணும் என்று சொன்னார்.

- Advertisement -

அங்க இருந்த ஒவ்வொரு ஆளா இந்த கேரக்டர்ல நடிக்க வைக்க முயற்சி பண்றேன். நிறைய பேருக்கு டயலாக் சொல்லிக்கொடுத்து ரிகர்சல் பார்க்கறேன். நல்ல நடிக்கிறவனுக்கு தமிழ்ல டயலாக் பேச தெரியலே. தமிழ்ல பேசறவனுக்கு நடிக்கத் தெரியலே. நேரம் வேற ஆயிட்டே இருக்குதுன்னு கடைசியில் டைரக்டர் அந்த கேரக்டர்ல நீயே நடின்னு என்னை சொல்லிட்டார்.

வயசான கெட்டப்புல என்னை பார்த்ததும் கமலும் ஸ்ரீதேவியும் ஷாக் ஆயிட்டாங்க. ஏன்னா நான் அசிஸ்டென்ட் டைரக்டர். அதனால் கமல் ஸ்ரீதேவி இருக்கிறதால நான் சரியா நடிக்காம சொதப்பிடுவேன்னு கமல் சந்தேகப்பட்டார். அதனால் டைரக்டர் கிட்ட எதுக்கும் ரிகர்சல் பார்த்திடலாம்ன்னு கமல் சொன்னார். ஆனா ரிகர்சல் வேண்டாம், டேக் போயிடலாம். சரியா பண்ணிடுவான்னு டைரக்டர் நம்பிக்கையா சொல்லிட்டார்.

- Advertisement -

நானும் முதல் முறையாக கேமரா முன்னால தைரியமா நடிச்சேன். ஆனா கமல் முகத்தையே பார்க்கலே. ஏன்னா அவர் ஆ ஊன்னு முகத்துல ஏதாவது ரியாக்சன் காட்டி என்னை கவித்துடுவாருன்னு தெரியும். நான் அந்த சீன்ல டயலாக்கை பேசி முடிச்சுட்டேன். கமல்ஹாசன் தலையை ஆட்டினார். அப்போது டக்குன்னு ஒரு டயலாக் ஸ்கிரிப்ட்டுல இல்லாத ஒரு டயலாக்கை பேசினேன்.

ஆமா என்ன புரியுதோ என்னமோ, எதுக்கு எடுத்தாலும் சாமி மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டிக்கோ என்று சொல்லிட்டு எந்திரிச்சு வந்துட்டேன். அதைக்கேட்டு கமல் ஷாக் ஆயிட்டார். எங்க டைரக்டர் உடனே சிரிச்சு கைதட்டினார். அப்புறம் யோவ் என்னய்யா இது என்றார். ஆமா சார், அவர் ரொம்ப நேரமா என்னை வாரிட்டு இருந்தார். கடைசியில் எனக்கு ஒரு கேப் கெடைச்சுது. நான் வாரிட்டேன் என்று சொன்னேன் என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே பாக்யராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்