- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாடா ஒரு வழியாக முடிவுக்கு வந்த இயக்குனர் சிபி சக்ரவர்த்தி - தெலுங்கு பட தயாரிப்பாளர்...

அப்பாடா ஒரு வழியாக முடிவுக்கு வந்த இயக்குனர் சிபி சக்ரவர்த்தி – தெலுங்கு பட தயாரிப்பாளர் பஞ்சாயத்து!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டில் வெளியான டான் படம் ரூ. 100 கோடிக்கு மேல் கூடுதலாக வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது.அந்த படத்துக்கு பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சில படங்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படங்கள் எதுவுமே உருவாகவில்லை.

லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினி நடிக்க இருந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்தன. ஆனால் அவர் சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் அந்த படத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தெலுங்கில் நடிகர் நானி நடிக்க சிபி சக்கரவர்த்தி இயக்கும் ஒரு படத்திற்கான வேலைகள் ஆரம்பமானது.
அந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் தெலுங்கு பட தயாரிப்பாளர் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிப்பதாக இருந்தது.

- Advertisement -

அதன்பிறகு அந்த படமும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் பேஷன் ஸ்டுடியோ சுதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக திட்டமிடப்பட்டது. அந்தப் படத்தின் வேலைகளும் ஆரம்பமான நிலையில் அதன் பிறகு ஒரு கட்டத்தில் அந்தப்படமும் உருவாகவில்லை. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173 வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியானது.

சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இயக்குனராக சிபி சங்கரவர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவரும் அந்த படத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிப்பதாக இருந்த தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புகார் அளித்தது.

- Advertisement -

இந்த படத்துக்காக ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் நடந்த நிலையில் 2023ம் ஆண்டில் ஒன்றரை கோடி ரூபாய் வரை சிபி சக்கரவர்த்தி பணம் பெற்றதாகவும் அந்த பணத்தை திருப்பி தராவிட்டால் அவர் இயக்கும் படங்களை வெளியிட தடை விதிக்க கோரியும் தெலுங்கு தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. பல மாதங்களாக நடந்து வந்த இந்த விவகாரம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவுக்கு வந்துள்ளது.

அந்த படத்துக்கு இயக்குனருக்கு வழங்கப்பட்ட அட்வான்ஸ் தொகை. படத்திற்காக அலுவலகம் அமைத்தது, கதை விவாதம் உள்ளிட்ட செலவு தொகைகளுக்காக ரூ. 3.75 கோடி வரை பணம் அந்த தெலுங்கு பட தயாரிப்பாளருக்கு பணம் தரப்பட்டு தற்போது இந்த பஞ்சாயத்து சமூகமாக முடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்