- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருடன் நடிக்க மறுத்த மோகன்லால், ஸ்ரீலீலா - அந்த பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தும்...

நடிகர் அஜீத்குமாருடன் நடிக்க மறுத்த மோகன்லால், ஸ்ரீலீலா – அந்த பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் படக்குழு!

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை அதிக வெற்றிகளை பெறும் பந்தய குதிரை மீது பணம் கட்டுவது போல தான் வெற்றிப் படங்களை தரும் ஹீரோக்களை வைத்து தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிப்பார்கள். ரஜினி நடிக்கும் படங்களுக்கு இன்றும் கிராக்கி இருக்க காரணம் அவரது படங்கள் வணிக ரீதியாக ஜெயித்து லாபத்தை குவிக்கிறது.

ஆனால் நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை அவரது 50வது படம் மங்காத்தாவுக்கு பிறகு பெரிய அளவில் படங்கள் வெற்றி பெறவில்லை. விஸ்வாசம் வீரம் வேதாளம் குட்பேட் அக்லி போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி என்றாலும் கணிசமான லாபம் தரவில்லை.

- Advertisement -

இதற்கிடையே அஜீத்குமாருக்கு போட்டியாளராக கருதப்பட்ட விஜயும் அரசியலுக்கு வந்து விட்டதால் அஜீத்குமாருக்கு சினிமாவில் மார்க்கெட் இமேஜ் மிகவும் சரிந்து போய் விட்டது. மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கேரளா கர்நாடகாவில் அஜீத்குமார் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இல்லை.

இந்த சூழ்நிலையில் குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் ஆன நிலையில் டேர்டெவில் என்ற படத்தில் நடிக்கும் அஜீத்குமார் அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்தில் மொத்த பட்ஜெட்டில் முடிந்த வரை குறைக்க அஜீத்குமார் தரப்பு பலகட்ட முயற்சிகளை செய்து வருகிறது.
ஏனெனில் சொந்த காசில் படம் எடுப்பதால் அஜீத்குமார் முன் எச்சரிக்கையாக இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் டேர் டெவில் படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலாவும் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிப்பதாக முதலில் கமிட் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது சம்பளம் பல கோடி ரூபாய் என்பதால் இப்போது அவர்கள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் 30 கோடி ரூபாய் மோகன்லால் சம்பளம் உள்ளது. ஸ்ரீலீலாவும் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறுவதாக தெரிகிறது.

அதனால் இந்த படத்தில் மோகன்லால் நடிக்க வேண்டிய கேரக்டரில் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் ஏற்கனவே தமிழில் வெளியான ஈ பாகுபலி புலி போன்ற சில படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பதால் அவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்