தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சீடர். கடந்த 1980 90களில் கே பாக்யராஜ் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். யதார்த்தமான கதைக்களங்களில் காமெடியான படங்களை தருவதில் கே பாக்யராஜ் பெரிய ஸ்பெஷலிஸ்ட். திரைக்கதையில் இந்திய அளவில் சிறந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
இந்நிலையில் அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை பூர்ணிமாவை கே பாக்யராஜ் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகளும் உள்ளனர். இருவருமே சினிமாவில் நடித்திருக்கின்றனர்.
இயக்குனர் மற்றும் நடிகரான கே பாக்யராஜ், பூர்ணிமாவை திருமணம் செய்த காலகட்டத்தில் மிகவும் பிஸியாக இருந்திருக்கிறார். தனது படங்களில் அவர் பணி செய்துகொண்டு இருந்ததால், அவர்கள் இருவரும் தேனிலவுக்கு செல்ல முடியவில்லை. மகள் மற்றும் மகன் பிறந்த பிறகுதான் தேனிலவுக்கு போகலாம் என்ற யோசனையே நடிகர் கே பாக்யராஜூக்கு வந்திருக்கிறது.
ஆனால் பூர்ணிமாவோ, குழந்தைகளை விட்டு விட்டு என்னால் வர முடியாது என்று கண்டிசனாக கூறிவிட்டார். சரி குழந்தைகளையும் அழைத்துப் போவோம் என்று கூறியிருக்கிறார் கே பாக்யராஜ். பூர்ணிமா அதற்கு, துணைக்கு என் அம்மா வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கும் நடிகர் கேபாக்யராஜ் சமாதித்திருக்கிறார்.
என் தம்பியும் இதுவரை வெளிநாட்டுக்கே போனதில்லை என்று பூர்ணிமா வருத்தமாக கூறியிருக்கிறார். சரி அவரையும் கூட்டிப் போவோம் என்று கே பாக்யராஜ் கூறியிருக்கிறார். இப்படி திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் தனது மனைவி 2 குழந்தைகள் மாமியார் மச்சானோடு 2 மாதங்கள் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்று வந்திருக்கிறார்.
இயக்குனர் கே பாக்யராஜ் படங்களில் வரும் காமெடி போலவே அவரது தேனிலவும் நிஜத்தில் அமைந்திருக்கிறது. ஹனிமூனுக்கு கணவன் மனைவியை அழைத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் இங்கே பிள்ளைகள் மாமியார் மச்சினன் என்று குடும்பத்துடன் சென்று வெளிநாட்டில் தேனிலவை கொண்டாடி வந்திருக்கிறார் நடிகர் கே பாக்யராஜ் என்ற இந்த தகவல் இப்போது வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





