- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி கூறியதாவது, என் படத்தை பொருத்த வரைக்கும் எப்பவுமே சொல்வேன். எனக்கு கழுத்துக்கு மேல தொங்குகிற கத்தி மாதிரி தான் காமெடி. காமெடி படங்கள் பண்றதுதான் ரொம்பவும் கஷ்டம். எனக்கு சீரியஸ் படங்கள் பண்றவங்களை பார்க்கும் போது ரொம்ப ஆசையா பொறாமையா இருக்கும். ஏன்னா ஸ்கிரிப்ட் சைடுல அதை முடிச்சிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுல அதை எக்ஸ்க்யூட் பண்ணினால் போதும். ஆனா காமெடி என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டுல அதை எக்ஸ்போஸ் பண்ணிட்டே இருக்கணும். என் படம் என்றாலே காமெடியை எதிர்பார்ப்பாங்க என்று கூறியிருக்கிறார்.





