- Advertisement -
நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் வருகிற 20ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகி நடிகை சாய் பல்லவி பேசியதாவது, இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது எங்கும் கொடிகளாக இருந்ததை பார்த்ததும் இது ஒரு அரசியல் நிகழ்வு போல இருந்தது. தனுஷ் என்ன செய்தாலும் சிறந்ததாக அமைய வாழ்த்துக்கள். அவருக்கு சிறந்தது தான் நடக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் இப்போது நடிப்பதில்லை. ஆனால் தனுஷ் அப்படி செய்யாமல் தொடர்ந்து நடிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர் ரசிகர்களுக்கு பிடித்த யதார்த்தமான நபர். அதனால் தனுஷ் என்ன முடிவு எடுத்தாலும் ப்ளீஸ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் ஏராளமான ரசிகர்கள் தனுஷை மிஸ் செய்வார்கள் என்று நடிகை சாய் பல்லவி பேசியிருக்கிறார்.





