- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாவற்றையும் நொறுக்கி தள்ளும் ஒரே ஆயுதம் அதுதான்… அதனால் இந்த மேடை எனக்கு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது...

எல்லாவற்றையும் நொறுக்கி தள்ளும் ஒரே ஆயுதம் அதுதான்… அதனால் இந்த மேடை எனக்கு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது – நடிகர் கமல்ஹாசன் பேச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவும் வகையில் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை துவக்கி கடந்த 20 ஆண்டுகளாக அதை சிறப்பாக நடத்தி வருகிறார். மேலும் அந்த அமைப்பின் விதைத்திட்டம் என்பதும் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டு துவக்கம், விதைத்திட்டம் 15வது ஆண்டு ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், இதை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா இன்று மாலை நடந்தது. தன்னார்வலர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்கொடையாளர்கள் கல்வி நிறுவன உரிமையாளர்கள் என பலரும் இணைந்த ஒரு கூட்டு அமைப்பாக அகரம் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை அகரம் பவுண்டேஷன் உருவாக்கி வருகிறது. அகரம் விதைத் திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உயர் கல்வி வாய்ப்பு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 8000 பேர் ஒன்று கூடும் நிகழ்வாக சென்னையில் இந்த விழா நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா கார்த்திக் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சிவக்குமார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியை பார்க்கும் எனக்கே இவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்போது அகரத்தை சேர்ந்தவர்களுக்கும் இதை வழிநடத்தும் சூர்யா மற்றும் அவரது குழுவினருக்கும் எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும் என்பது தெரிகிறது. இந்த மேடையில் ஒவ்வொரு மாணவரும் வந்து அவர்களது பயணத்தையும் இன்று அவர்கள் வந்து அடைந்துள்ள இடத்தையும் பற்றி சொன்னார்கள். அவர்கள் சொல்லும்போது இந்த அகரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என்பதைத்தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

விதை என்ற ஒரு திட்டம் அதன் மூலம் இளைஞர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை, அதை யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தெளிவும் சூர்யாவுக்கு இருந்திருக்கிறது. தன்னார்வலராக இருப்பது கடினமான ஒன்று. எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் நாம் நேரத்தை கொடுப்பது என்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். அகரம் இன்னும் வலிமையாக செயல்பட்டு சூர்யாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று வெற்றிமாறன் பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது, சனாதன சங்கிலிகளை சர்வதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்களை நடத்துகிறோம். அதில் எல்லாம் கிடைக்காத சந்தோஷம் அகரம் நிகழ்ச்சியில் இந்த மேடையில் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

- Advertisement -

சற்று முன்