- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதிக்கு எதிராக கொம்பு சீவப்படும் நடிகர் கமல்ஹாசன், அரசியல் களத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா? -...

தளபதிக்கு எதிராக கொம்பு சீவப்படும் நடிகர் கமல்ஹாசன், அரசியல் களத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா? – திமுகவின் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய அரசியல் தலைவராக மாறியிருக்கிறார். அவருக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு வாகனங்களுடன் அவர் வெளியிடங்களுக்கு சென்றுவருகிறார்.

தமிழ் சினிமாவில் இருந்து ஏராளமான நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். ஆனால் அதில் பெரிய அளவில் மக்கள் வரவேற்கப்பட்டவர்கள் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் இரண்டு பேர் மட்டும்தான் பெரிய அளவில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர்கள்.

- Advertisement -

நடிகர் சிவாஜி கணேசன் அரசியலில் ஜொலிக்கவில்லை. அதே போல் நடிகர்கள் கமல்ஹாசன் கே பாக்யராஜ் சரத்குமார் டி ராஜேந்தர் கார்த்திக் மன்சூர் அலிகான் ராதாரவி கருணாஸ் நடிகைகள் குஷ்பு நக்மா நமீதா காயத்ரி ரகுராம் விந்தியா என பலரும் அரசியலுக்கு வந்தும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

ஆனால் நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்தில் பெரிய அளவில் கவனமும் வரவேற்பும் பெற்றவராக இருக்கிறார். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமாக உறுப்பினர்கள் அவரது தவெக கட்சியில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவு விஜய்க்கு உள்ளதாகவும், கல்லூரி மாணவ மாணவியர் விஜய் வருகையை அரசியலில் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் விஜய்க்கு எதிராக நடிகர் கமல்ஹாசனை களம் இறக்கவும் தமிழ்நாடு முழுவதும் விஜய் பேசும் இடங்களில் எல்லாம் நடிகர் கமலை பேச வைத்து, விஜய்க்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கவும் திமுகவுக்கு ஆதரவாக பேச வைக்கவும் திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே திமுகவின் விசுவாசியான கமல் இதை மறுக்க வாய்ப்பில்லை. உடனே ஓகே சொல்லிடுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நடிகர் கமல்ஹாசனை விரும்பிய அளவுக்கு அரசியல்வாதி கமல்ஹாசனை மக்கள் விரும்பாமல்தான் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். திமுகவின் விசுவாசியாகவும் மக்களிடம் அதிருப்தியை பெற்றுவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் கமல், நடிகர் விஜய் குறித்து விமர்சித்து பேசினால் மக்களிடம் எடுபடுமா, மக்கள் அதை ஆதரிப்பார்களா, திமுகவின் கணக்கு சரியாக வருமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. விஜயை பற்றி கமல் பேச்செல்லாம் மக்களிடம் எடுபடாது என்பதே பொதுவான விமர்சனமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்