நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அது இந்தியன் 3க்கான காட்சிகள் அதிகளவில் படமாக்கப்பட்டதால், மீண்டும் ரி ஷூட் செய்ய இயக்குநர் ஷங்கர் தயாராகி வருகிறார். எனவே, வரும் 25ம் தேதி முதல் இந்தியன் 2 ரிஷூட்டில் கமல் கலந்துக்கொள்கிறார். இதில் கமல், காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள், 10 நாட்களுக்கு படமாக்கப்படுகிறது.
கமல் இப்போது ஏகப்பட்ட பிஸியில் இருந்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். இதையடுத்து, இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா, பட பூஜையுடன் கமல் பிறந்த நாளான, நவம்பர் 7ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், எச். வினோத்தின் படத்துவக்க விழா, ரசிகர்களுக்கான இன்ப அதிர்ச்சி அல்ல. அது ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட ஒன்றுதான். வேறு ஒரு விஷயத்தை ரசிகர்களுக்கு தர கமல்ஹாசன் திட்டமிட்டு இருக்கிறார். அதுபற்றி யோசித்த போதுதான், இந்த ஐடியா உதயமாகி இருக்கிறது. உடனே, அதை செயல்படுத்தி வருகிறார் கமல்.
அதுதான், இவ்வளவு பரபரப்புகளுக்கு இடையில், கமல்ஹாசன் பென்னிங் மில் பகுதியில், ஒரு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு இருக்கிறார். அங்கு பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பும் இல்லை. பிக்பாஸ் விளம்பரம் சார்ந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை.
கமல் நடித்துவரும் இந்த படப்பிடிப்பை, மணிரத்னம் இயக்கி வருகிறார். ஆனால், மணிரத்னம் இயக்கும் படம், அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் துவங்கப்படும் என திட்டமிட்ட நிலையில், இப்போது மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிக்கும் காட்சிகள், பிரமோவாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டுதான் படப்பிடிப்பே துவங்க திட்டமிட்டுள்ள நிலையில், இப்போது மணிரத்னம் படத்துக்கான பிரமோ எதற்காக என்றால், வரும் நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாள் அன்று, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் பிரமோவை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த திட்டமிட்டுள்ளார் கமல். அதற்காக தான் சில தினங்களாக அந்த பிரமோவுக்கான படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் கமல்.





