- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் சர்ச்சைகள் குறித்து நிறைய பேச வேண்டும்… கொஞ்சம் பொறுங்க… பேசுகிறேன் - சூசகமாக பேசி...

அரசியல் சர்ச்சைகள் குறித்து நிறைய பேச வேண்டும்… கொஞ்சம் பொறுங்க… பேசுகிறேன் – சூசகமாக பேசி அரசியல் கட்சிகளை மிரட்டிய விண்வெளி நாயகன்!

- Advertisement -

நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்த கமல்ஹாசன் திடீரென மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். ஆரம்பத்தில் திமுக பாஜக கட்சிகளை எதிர்த்து அரசியல் பேசி நடிகர் கமல், சட்டசபை தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல்களை தொடர்ந்து சந்தித்தார்.

ஆனால் அவரது கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிகளில் 3ம் இடம் 4ம் இடம் சில தொகுதிகளில் 5ம் இடமும்தான் கிடைத்தது. சொற்பமான எண்ணிக்கையில்தான் பெரும்பாலான தொகுதிகளில் அவருக்கு ஓட்டுக்களே கிடைத்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து கமல் போட்டியிட்டார்.

கட்சியின் தலைவரான அவரே களத்தில் நின்றும் வெற்றி கிட்டவில்லை. வானதி சீனிவாசன்தான் ஜெயித்தார். பிறகு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை என்று அறிவித்த கமல், திமுக காங்கிரஸ் கூட்டணியான இண்டி கூட்டணியில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

திமுகவின் அதி தீவிர விசுவாசியாக மாறிய கமல்ஹாசனுக்கு இந்த முறை ராஜ்யசபா எம்பி பதவியை தர திமுக தலைவர் ஸ்டாலினும் சம்மதித்து விட்டார். மதிமுக செயலாளர் வைகோவுக்கு வழங்கும் ராஜ்ய சபா எம்பி பதவியை கமலுக்கு ஸ்டாலின் தாரை வார்த்துவிட்டதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாத மொழி அரசியலும் கமல்ஹாசனை அப்செட் ஆக்கியுள்ளது.

இதுகுறித்து கமல் பேசியதாவது, தமிழ் சினிமாவை புரட்டி போடும் அளவுக்கு ஒரு படத்தை எடுக்க ஆசை இருந்தது. அதற்காகத்தான் தக்லைஃப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பல வெளிநாட்டு கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இப்படம் சர்வதேச அளவில் உருவாகியுள்ளது. நான் பார்த்த மணிரத்னம் இன்று ஞானியாக மாறி உள்ளார். தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது. அதற்காக நன்றி சொல்கிறேன். தற்போது நடக்கும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் குறித்து நிறைய பேச வேண்டி உள்ளது. அதையெல்லாம் விவரமாக பின்னர் பேசுகிறேன்.

இப்போதே பேச ஆசை தான். ஆனாலும் அதற்கான நேரம் இதுவல்ல. தமிழனாக அதற்கு நேரம் ஒதுக்கி தருவது மட்டுமல்ல, அந்த கருத்துக்களை எல்லாம் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதும் என் கடமை. நான் மேடையில் பேசும்போது உயிரே உறவே தமிழே என சொல்வதற்கான அர்த்தத்தை முழுவதுமாக உணர்கிறேன். உயிரோட்டமான இந்த வார்த்தைகளை தொடர்ந்து சொல்வேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

சற்று முன்