- Advertisement -
Homeபொழுதுபோக்குசின்ன பொண்ணை ஏமாத்திய இவரு அதை பத்தி பேசறாரா?, பிரதீப் ரெட்கார்டு விவகாரம் - பிக்பாஸ்...

சின்ன பொண்ணை ஏமாத்திய இவரு அதை பத்தி பேசறாரா?, பிரதீப் ரெட்கார்டு விவகாரம் – பிக்பாஸ் கமலுக்கு கடைசியில் இப்படி ஒரு வில்லங்கமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது, இந்தியன் 2 மற்றும் 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை அடுத்து, எச் வினோத் இயக்கத்தில் கமல், அவரது கமல் 233 வது படத்தில் நடிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, மணிரத்னம் இயக்கும் கமல் 234 படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே கடந்த 5 வாரங்களாக, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கமல் நடத்தி வருகிறார். வாரந்தோறும் சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்கும் கமல் அந்த வாரத்தில் நடந்த பஞ்சாயத்துகள் குறித்து பேசி, குறைந்த ஓட்டுகள் வாங்கிய ஒரு போட்டியாளரை வெளியேற்றுவது வழக்கம்.

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி என்ற போட்டியாளர் மீது, பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள பெண்கள் புகார் கூறியதால், பிரதீப்பை ரெட் கார்டு காட்டி கமல் வெளியேற்றினார். கடந்தவாரம் வரை, நல்ல போட்டியாளராக இருந்த பிரதீப் இப்படி வெளியேற்றப்பட்டது பலத்த ஏமாற்றத்தை பலருக்கும் ஏற்படுத்தியது.

அப்போது கமல், பெண்களுக்கு வீட்டில் மட்டுமல்ல, நாட்டிலும் பாதுகாப்பு மிக முக்கியம். அதனால், பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக, கண்டிப்பாக நான் இருப்பேன். பிரதீப்பை வெளியேற்ற பிக்பாஸ் மறுத்திருந்தால் நானும் வெளியேறி இருப்பேன் என்று பேசினார்.

நடிகர் கமல்ஹாசன், பல படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு எப்படியும் உதட்டில் முத்தம் கொடுத்து விடுவார். புன்னகை மன்னன் படத்தில் நடித்த ரேகாவுக்கு, அவருக்கு சொல்லாமல் திடீரென ஏமாற்றி கமல் முத்தம் கொடுத்து காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதை பல பேட்டிகளில் ரேகா வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரேகா பேசிய அந்த வீடியோவை இப்போது வைரலாக்கிய சமூகவலைதள வாசிகள், சின்ன பெண்ணை ஏமாற்றி முத்தம் கொடுத்துவிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது வேடிக்கையாக உள்ளது. மும்பையில் உள்ள அவரது இரண்டு பெண்களுக்கும் ஒரு தந்தையாக இவர் அருகில் இருந்து பாதுகாக்கவில்லை. தன்னுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த சரிகா, கவுதமி ஆகியோரின் எதிர்கால பாதுகாப்பு கருதாமல் அவர்களை கழட்டிவிட்ட கமல், இப்படி சினிமா வசனம் பேசுவது, காமெடியாக உள்ளது என்று, கிண்டலடித்து வருகின்றனர்.

சற்று முன்