இப்போது ஒரு திரைப்படம் உருவானால் அதை டிஜிட்டல் உரிமம் விற்றால்தான் தயாரிப்பாளருக்கு கணிசமான ஒரு தொகை கிடைக்கிறது. அதாவது முதலீடு செய்த தொகையில் ஒரு பெரும்பகுதி ஓடிடி வியாபாரம் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது. ஆனால் முன்பு போல் ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை படங்களுக்கு தருவதில்லை.
முன்பெல்லாம் டைரக்டர் ஹீரோ மியூசிக் டைரக்டர் காம்போ பார்த்தே படத்துக்கு பெரிய விலை கொடுத்த ஓடிடி தளங்கள் இப்போது விலையை வெகுவாக குறைத்து விட்டன. இதனால் ஓடிடி நிறுவனங்கள் வியாபாரமின்றி பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கி கிடக்கின்றன.
இந்த சூழலில் இயக்குனர் ராஜமௌலி வாரணாசி என்ற படத்தை ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ராஜமௌலி வியாபாரம் பேசிய போது அவர்கள் ரூ. 175 கோடி வரை விலை தர சம்மதித்துள்ளனர். ஆனால் 500 கோடி ரூபாய் வரை ராஜமௌலி கேட்டுள்ளார்.
ஆனால் பேரம் படியவில்லை. இதையடுத்து ராஜமௌலி அமெரிக்காவில் உள்ள நெட்பிளிக்ஸ் தலைமை நிறுவனத்துக்கு விமானத்தில் பறந்து சென்ற ராஜமௌலி அங்கு போய் வியாபாரம் பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து இ மெயில் அவர்களுக்கு சென்ற நிலையில் அவர்களும் ரூ. 175 கோடிக்கு மேல் விலை தர முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டனர்.
உலகளவில் 3000 கோடி ரூபாய் வசூலித்த துரந்தர் படத்தையே நாங்கள் 175 கோடி ரூபாய்க்கு தான் வாங்கினோம். படம் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் மிக அதிகமான வசூலை குவித்தால் நிபந்தனையின்படி அதிக விலை தருகிறோம் என்றும் பேசியிருக்கின்றனர். இதனால் இயக்குனர் ராஜமௌலி ஏமாற்றத்துடன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை குறைக்கும் விதமாக படத்தின் நாயகன் மகேஷ்பாபு, இயக்குனர் ராஜமௌலி ஆகியோர் பிராப்பர்டி ஷேர் 20 சதவீதத்தை குறைத்துக்கொள்ளவும், மாதந்தோறும் இந்த படத்துக்காக பணியாற்றும் ராஜமௌலி அவரது மனைவி மகளுக்கான சம்பளம் ரூ. 5 கோடியை இன்னும் குறைத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





