- Advertisement -
நடிகர் கார்த்தி தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு இளைஞன் நம் கண் முன்னே ஜாம்பவானாக வளர்ந்ததைப் பார்த்த ஒரு தலைமுறையை சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் டோனி சார். 7 என்ற எண் என்பது வெறும் எண்ணை தாண்டியது. சென்னையை பொறுத்தவரை அது எண்ணற்ற உணர்வுகள் மறக்க முடியாத வெற்றிகள் மற்றும் கடைசி வரை நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை உணர்த்திய அற்புத தருணங்களை குறிக்கிறது. உங்கள் ஆட்டத்தால் மட்டும் இன்றி பணிவு கண்ணியம் மற்றும் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீங்கள் நடந்து கொண்ட விதத்தாலும் ஒரு தலைமுறைக்கே உதாரணமாக திகழ்ந்துள்ளீர்கள். உங்கள் பயணம் எங்கு சென்றாலும் நீங்கள் எப்போதும் எங்கள் தல தான். உங்களுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.





