- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகை இருக்கிற பக்கமே நான் வர மாட்டேன்… பயந்து போய் கேரவனுக்குள் பதுங்கிய நடிகர்...

அந்த நடிகை இருக்கிற பக்கமே நான் வர மாட்டேன்… பயந்து போய் கேரவனுக்குள் பதுங்கிய நடிகர் சூரி – சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர் கார்த்தி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் அதிதி ஷங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாவீரன் நேசிப்பாயா உள்ளிட்ட பல படங்களில் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி விருமன் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சில சம்பவங்களை மேடையில் பகிர்ந்துக்கொண்டார். அப்போது கார்த்தி கூறியதாவது, இந்த படத்தில் அதிதி ஷங்கர் நடித்த போது என்னிடம் சில கேள்விகளை கேட்டார். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது.

- Advertisement -

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது பெரிய பணக்கார நாடு எது என்று அதிதி ஷங்கர் என்னிடம் கேட்டார். நான் மிகவும் யோசித்தேன். அமெரிக்கா போய் எம்எஸ் எல்லாம் படித்திருக்கிறோம். இதற்கு பதில் சொல்லாவிட்டால் மரியாதை என்ன ஆவது என்றெல்லாம் யோசித்தேன். ஆனால் கடைசி வரை பணக்கார நாடு எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அங்கிருந்த சூரி ப்ரோவிடமும் கேட்டேன். அவரும் யோசித்து யோசித்து பார்த்து விட்டு தெரியாது என்று சொல்லி விட்டார். எனக்கு தெரியலே என்று தோல்வியை அதிதியிடம் ஒப்புக்கொண்டேன். என்ன பதில் என்று கேட்ட போது அதிதி ஷங்கர் பங்களாதேஷ் என்று பதில் சொன்னார். நான் அப்படியே நொந்து போய்விட்டேன். அப்புறமும் ஒரு கேள்வி கேட்டார். வேண்டாம் ஆளை விடு என்று சொல்லியும் அவர் விடவில்லை.

- Advertisement -

அப்போது ஒரு பெண் தன் அப்பாவை வெளியே தள்ளி விட்டாள். அவள் பெயர் என்ன என்றார். நானும் கண்டபடி யோசித்து பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. சூரிக்கும் பதில் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இதற்கும் பதில் தெரியவில்லை என்றேன். அதற்கு அதிதி ஷங்கர் புஷ் பா என்றார். நான் அப்படியே ஷாக் ஆகி விட்டேன்.

இதை கேட்ட சூரி பிரதர், தயவு செய்து இந்த பொண்ணு இருக்கிற பக்கமே இனி நான் வர மாட்டேன். நான் கேரவனுக்குள் போய் இருந்துக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதிதி சொல்கிற கடிஜோக்கை எல்லாம் தாங்க முடியாமல் அவர் கேரவனுக்குள் போய் பதுங்கிக் கொண்டார் என்று நடிகர் கார்த்தி அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்