தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அவர் நடித்த கமர்ஷியல் படங்களில் கஜினி வாரணம் ஆயிரம் சிங்கம் சிங்கம் 2 ஆறு வேல் அயன் ஏழாம் அறிவு போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுத் தந்த படங்களாக இருந்தன. இந்த ஆண்டில் வெளியான கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களும் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் படங்களாக ஜெயித்திருக்கின்றன.
ஆனால் சிங்கம் 2 படத்துக்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக சூர்யாவுக்கு அவர் நடித்த 12 படங்களில் 10 படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக இருந்து ஏமாற்றம் தந்தன. ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. ஆனால் தியேட்டரில் வெளியான 10 படங்களும் தோல்வியடைந்தன.
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட என்ஜிகே தானா சேர்ந்த கூட்டம் காப்பான் அஞ்சான் என்ஜிகே எதற்கும் துணிந்தவன் கங்குவா போன்ற படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்த தோல்வி படங்களாக இருந்தன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படம் ரூ. 230 கோடி வரை வசூலித்த நிலையில் வணிக ரீதியான வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது, அண்ணன் சூர்யா நடித்த படங்களில் ரசிகர்கள் நான் உட்பட அனைவருக்கும் பிடித்தமான ஒரு படம் ஆறு. அது ரொம்ப முக்கியமான ஒரு படம். இப்பக்கூட நான் ரோட்ல போனா, ஆட்டோ டிரைவர்கள் என்னை பார்த்தா, தல ஆறு மாதிரி ஒரு படத்தில் நடி என்றுதான் சொல்வாங்க.
எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ஆனா அந்த படம் பார்த்து நான் ரொம்பவும் பயந்திருக்கேன். கஜினி எல்லாம் நாம் தொட முடியாது. விட்டுருவோம். வாரணம் ஆயிரம் படத்தையும் விட்ருவோம். ஆனால் கமர்ஷியல் படம் பண்ணனும் என்றால் அதிலும் ஆறு படத்தில் படம் முழுக்க அண்ணன் ஒரு ஃபயராவே இருப்பார்.
இப்படி நம்மால பண்ண முடியுமான்னு பயமா இருக்கும். அந்த படம் பார்த்துட்டு வெளியே வந்து டைரக்டர் ஹரி சார்கிட்ட போன் பண்ணி சொன்னேன். சார் நாலு பேரை அடிக்கணும் போல இருக்குது சார்ன்னு சொன்னேன். அதே மாதிரி சிங்கம் 2 டிரெய்லரை பார்த்த போது ஒரு ஊரையே அடிக்கணும் போல இருக்கு என்று அந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசியது, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





