- Advertisement -
Homeபொழுதுபோக்குபாசிசம் பாயாசம் என்று பாதரசம் பேசலாமா? நடிகர் விஜய் பேசியதை கிண்டலடித்த பிரபல காமெடி நடிகர்...

பாசிசம் பாயாசம் என்று பாதரசம் பேசலாமா? நடிகர் விஜய் பேசியதை கிண்டலடித்த பிரபல காமெடி நடிகர் – லொடுக்கு பாண்டிக்கு என்னங்க ஆச்சு?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கட்சி துவங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன் தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா, மாமல்லபுரம் பகுதியில் பூஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாக நடத்தப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் விஜய், தேர்தல் வியூகம் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் விஜய் மாநில அரசை பாயாசம் என்றும் மத்திய அரசை பாசிசம் என்றும் விமர்சித்து பேசியிருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த திமுக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் கருணாஸ் நடிகர் விஜய் பேசியதை விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. ரஜினி கமல் அஜீத்குமார் சூர்யா தனுஷ் நடித்த பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் கருணாஸ். சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற காமெடி நடிகர் கருணாஸ் பேசியதாவது, பாயாசத்துக்கும் பாசிசத்துக்கும் வித்யாசம் தெரியாத பாதரசம் ஒன்று பேசியிருக்கிறது. பாதரசம் எதிலும் ஒட்டாதது. பாதரசம் எப்போதும் மக்களிடம் ஒட்டப் போவதும் இல்லை. நஞ்சை கக்கப் போகும் கொடிய திராவகம் இந்த பாதரசம்.

- Advertisement -

தங்கத்தை வெள்ளியை உருக்கும் உருக்குலைக்கும் இந்த பாதரசம். நல்லா இருக்கிற நாட்டை உருக்குலைக்கின்ற இதுபோன்ற பாதரசங்களை பாசிசங்கள்தான் உருவாக்குகிறது. அந்த பாசிசங்கள்தான் இந்த பாதரசங்களுக்கு பாதுகாப்புகளை கொடுக்கிறது என்பதை நீங்கள் அத்தனை பேரும் உணர வேண்டும் என்று காமெடி நடிகர் கருணாஸ் பேசியிருக்கிறார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா லைலா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் திருடனாக நடித்திருப்பார் கருணாஸ். அதன்பிறகு பல படங்களில் காமெடி செய்து ஒரு கட்டத்தில் திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார். பிறகு அரசியல்வாதியாக மாறிய கருணாஸ், அரசியல் மேடைகளில் சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

- Advertisement -

சற்று முன்