- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மகன் படத்தில் நடிக்கிறேனா... நடந்ததை கூறிய நடிகர் கவின்... அதிலும் சஞ்சய் பற்றி அவர்...

விஜய் மகன் படத்தில் நடிக்கிறேனா… நடந்ததை கூறிய நடிகர் கவின்… அதிலும் சஞ்சய் பற்றி அவர் கூறிய வார்த்தைதான் ஹைலைட்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்து முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். கலெக்ஷன் கிங்காக வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் நடித்து வரும் விஜய், அதற்கு அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

 

இப்படியான சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதாவது, விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆவதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு, வந்து ஆட்டம் போட்டிருப்பார் சஞ்சய். அப்போதே நிச்சயம் சஞ்சய் எதிர்காலத்தில் ஹீரோ ஆவார் என்று பலரும் கூறி வந்தனர். அதற்கு திட்டமிட்டு தான் விஜய் இந்த பாடலில் அவரை ஆட வைத்திருப்பதாகவும் பேசி வந்தனர். ஏறத்தாழ இதுதான் உண்மை என்பது போல இருந்தது.

 

ஆனால், சஞ்சய்க்கு திரைக்கதை எழுதுவதிலேயே அதிக விருப்பம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக லண்டன் சென்ற அவர், அதற்கு ஏற்ற படிப்பை மேற்கொண்டு வந்தார். தனது நண்பருடன் சேர்ந்து குறும்படத்தையும் அவர் இயக்கி இருக்கிறார். இப்படியான சூழலில் தான், லைக்கா நிறுவனத்துடன் சஞ்சய் ஒப்பந்தம் போட்டார்.

 

இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களை கடந்துவிட்ட போதும் படத்தின் ஹீரோ யார் என்பது மட்டும் தெரியவே இல்லை. முதலில், விக்ரமின் மகன் துருவ் நடிப்பதாக கூறப்பட்டது. கவினும் இந்த படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது கவினிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

  1. இதற்கு பதில் கூறிய அவர், படம் குறித்த மீட்டிங் ஒன்று நடைபெற்றது. அதில் நான் பங்கேற்றேன். அப்போது, எனக்கு அடுத்தடுத்து இருக்கும் திரைப்படங்கள் பற்றி கூறினேன். அவர்களும் அதைக் கேட்டுக் கொண்டு பிறகு பேசுவதாக தெரிவித்தார்கள். அந்த சந்திப்பில் சஞ்சய்யை சந்திக்க நேரிட்டது. அவரது தந்தையை போலவே மிகவும் எளிமையாக இருந்தார். நாம்தான் இங்கு ஒவ்வொருவரும் இப்படி என்று கற்பனை செய்து கொள்கிறோம். ஆனால் அப்படி எதுவும் அங்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்