- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதுதான் எனக்கு வேணும், இல்லேன்னா ஷூட்டிங் கேன்சல் பண்ணுங்க… படப்பிடிப்பில் அடம்பிடித்த நடிகர் கவின் -...

அதுதான் எனக்கு வேணும், இல்லேன்னா ஷூட்டிங் கேன்சல் பண்ணுங்க… படப்பிடிப்பில் அடம்பிடித்த நடிகர் கவின் – இவர் அலப்பரைக்கு அளவே இல்லையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்த அவர் பிறகு விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதில் மற்றொரு பெண் போட்டியாளர் லாஸ்லியா என்பவரை லவ் டார்ச்சர் செய்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சினிமாவில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் டாடா லிப்ட் ஸ்டார் பிளடி பெக்கர் என அவரது படங்கள் இதுவரை வெளியாகின. இதில் டாடா படம் பெரிய வரவேற்பை பெற்றது. லிப்ட் படமும் திரில்லர் படமாக ரசிகர்களுக்கு பிடித்தது. ஆனால் ஸ்டார் படம் பெரிய கவனம் பெறவில்லை.

அடுத்து கடந்த தீபாவளிக்கு வெளியான பிளடி பெக்கர் படம் பலத்த தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தயாரித்த வகையில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. சமீபத்தில் கூட அவர் விநியோகஸ்தர் ஒருவருக்கு ரூ. 8 கோடி நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தார்.

பிலமண்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளராக களத்தில் இறங்கிய படம்தான் பிளடி பெக்கர். ஆனால் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்த கவின், இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வார் என்று எதிர்பார்த்த நெல்சனுக்கு கடைசியில், அவரே நஷ்டத்தை சந்திக்கும் சூழலை கவின் தந்துவிட்டார்.

இந்த சூழலில் கவின் நடிப்பில் உருவான படம் கிஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, கவினுக்கு கேரவன் வாகனம் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் நடிகர் விஜய் பயன்படுத்தும் கேரவன் வாகனம்தான் தனக்கு வேண்டும். அந்த கேரவன் இருந்தால் ஷூட்டிங் வருகிறேன், இல்லை என்றால் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விடுங்கள் என்று சொல்லி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளரை டார்ச்சர் செய்திருக்கிறார்.

வழக்கமாக நடிகர்களுக்கு கேரவன் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். பெரிய நடிகர்களுக்கு சகல வசதிகளுடன் நவீனமயமான அதிக வாடகை கேரவன்கள் வரவழைக்கப்படுவது வழக்கம். விஜய் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களுக்கு அது சரிதான். ஆனால் 4 படங்களில் மட்டுமே நடித்துள்ள கவின், விஜய் பயன்படுத்தும் கேரவன் கேட்டு அடம்பிடித்து படப்பிடிப்புக் குழுவினரை பதைபதைக்க செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்