- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த திட்டத்தை தனது கையில் எடுத்த நடிகர் கேபிஒய் பாலா - இந்த மனசு பெரிய...

அடுத்த திட்டத்தை தனது கையில் எடுத்த நடிகர் கேபிஒய் பாலா – இந்த மனசு பெரிய நட்சத்திர ஹீரோக்களுக்கு கூட வரலையே தம்பி…?

- Advertisement -

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. அவரது டைமிங் காமெடி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் டிவி குக் வித் கோமாளி சமையல் போட்டியிலும் பாலா ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இப்போது முன்னணி டிவி சேனல்களில் கேபிஒய் பாலா பிரதான செலிபிரட்டியாக மாறியிருக்கிறார்.

திரைப்படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். வருகிற 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகிறார். காமெடியனாக பல படங்களில் நடித்த அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி படத்தில் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

நடிகர் கேபிஒய் பாலா, தனது வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி பல உதவிகளை செய்து வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் துவங்கியுள்ள மாற்றம் என்ற சேவை அமைப்பிலும் கேபிஒய் பாலா இணைந்து அவரால் இயன்ற பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார்.
கல்வி உதவி, விசாயிகளுக்கு விவசாய பொருட்களை இலவசமாக வாங்கி தருதல் என பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது இலவசமாக ஒரு மருத்துவமனையை கேபிஒய் பாலா கட்டி வருகிறார். சென்னை பல்லாவரம் அருகே கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்க கேபிஒய் பாலா முடிவு செய்திருக்கிறார். இந்த மருத்துவமனை கட்ட நடிகர் அமுதவாணன், தனக்கு சொந்தமான பாதி நிலத்தை நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இப்போது மருத்துவமனை கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. இலவச மருத்துவமனையில் பணிசெய்ய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பீர்கள், எப்படி மருந்து மாத்திரைகளை வாங்குவீர்கள் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சின்னத்திரை பிரபலங்கள் அமுதவாணன் அறந்தாங்கி நிஷா தங்கதுரை போன்றவர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யவும் கேபிஒய் பாலாவுக்கு ஆதரவாக பக்கபலமாக முன்வந்துள்ளனர்.

கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் சில முன்னணி நட்சத்திர நடிகர்கள் ஒரு ரூபாய் கூட உதவ நினைக்காத இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதே துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே தனது வாழ்க்கை நோக்கமாக கொண்ட கேபிஒய் பாலா பல்லாவரத்தில் இப்போது இலவச மருத்துவமனை கட்டி வருகிறார். பிறரிடம் உதவி பெற்று நான் மற்றவர்களுக்கு உதவி செய்வது சரியல்ல. அந்த உதவியை அவர்களே நேரடியாக செய்து விடலாம். என் உழைப்பில் எனது வருமானத்தில் உதவுவதே உண்மையான உதவி என்று கேபிஒய் பாலா சமீபத்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்