- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த காட்சிகளில் நான் எப்போதுமே நடிக்க மாட்டேன்… உறுதியாக சொன்ன நடிகர் லெஜண்ட் சரவணன் -...

அந்த காட்சிகளில் நான் எப்போதுமே நடிக்க மாட்டேன்… உறுதியாக சொன்ன நடிகர் லெஜண்ட் சரவணன் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

சரவணன் அண்ணாச்சி என அழைக்கப்பட்டவர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் தொழிலதிபர். அவரது மகன் அருள் சரவணன். தொழிலதிபர். இப்போது திரைப்படங்களில் அவர் ஆர்வமாக நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் லெஜண்ட் என்ற படத்தில் நடித்த நிலையில் அவரை லெஜண்ட் சரவணன் என்று தமிழ் சினிமாவில் அழைக்கின்றனர்.

ஆரம்பத்தில் தனது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் மட்டுமே நடித்த அருள் சரவணன் பிறகு திரைப்படங்களிலும் நடிக்க வந்துவிட்டார். லெஜண்ட் படம் குறித்து பலவிதமான கலவையான விமர்சனங்கள் வந்தன. எனினும் அவர் தனது 2வது படத்திலும் நடித்து விட்டார்.
இந்த படத்தை துரை செந்தில்குமார் டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவர் மதுபானம் குடிப்பது போலவோ அல்லது சிகரெட் புகைப்பது போலவே தனது படங்களில் நடிக்க மாட்டார். அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்தால் தனது ரசிகர்களும் அந்த தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள் என்பதால் அதை எம்ஜிஆர் மிக கவனமாக தவிர்த்தார்.

அதே வழியில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான நடிகர் ராமராஜனும் அவர் நடித்த தனது படங்களில் மதுபானம் குடிப்பது போல் சிகரெட் புகைப்பது போல நடித்தது இல்லை. இப்படி தவறான பழக்கங்கள் கொண்ட காட்சிகளில் நடிப்பது ரசிகர்களின் மனதில் தவறான உணர்வை ஏற்படுத்தி விடும் என்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இப்போது நடிகர்கள் எம்ஜிஆர் ராமராஜனின் இந்த லிஸ்ட்டில் நடிகர் லெஜண்ட் சரவணனும் இணைந்து விட்டார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த லீடர் பட விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன் கூறியதாவது, நான் என்னுடைய வாழ்க்கையில் சினிமாவில் சிகரெட் பிடிக்கிற மாதிரியோ தண்ணி அடிக்கிற மாதிரியோ நடிக்கவே மாட்டேன். நிஜ வாழ்க்கையிலும் இதுவரை சிகரெட் தண்ணியை தொட்டது கூட கிடையாது. அதே போல் படத்திலும் அதை நான் பண்ணவே மாட்டேன் என்று நடிகர் லெஜண்ட் சரவணன் உறுதியாக கூறியிருக்கிறார்.

ஆனால் நட்சத்திர நடிகர்கள் பலரும் தங்களது படங்களில் சிகரட் புகைப்பது போலவும் மதுபானம் குடிப்பது போலவும் போதை மருந்துகளை பயன்படுத்துவது போலவும் அதிகமான காட்சிகளில் நடிக்கின்றனர். சில இயக்குனர்கள் போதை பொருட்களை மையப்படுத்திய படங்களை மட்டுமே எடுக்கின்றனர். ஆனால் லெஜண்ட் சரவணன் போன்ற புதுமுக நடிகர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்