- Advertisement -
Homeபொழுதுபோக்குவளர்ந்து வர்ற நேரத்துல இந்த வேண்டாத வேலை எதுக்கு? - ‘மோட்டார் மோகனு’ நடிகர் மணிகண்டனுக்கு...

வளர்ந்து வர்ற நேரத்துல இந்த வேண்டாத வேலை எதுக்கு? – ‘மோட்டார் மோகனு’ நடிகர் மணிகண்டனுக்கு யாரேனும் புத்தி சொல்வார்களா?

- Advertisement -

சில நடிகர்கள், மிக திறமைசாலிகளாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு வரும்போதுதான் வைரமாக பிரகாசிப்பார்கள். அதுவரை அவர்களை கூழாங்கல் போல நினைத்தவர்கள், பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கும் போது தான் அவர்களது திறமையை உணர்வார்கள். ஆனால் கடைசி வரை கூழாங்கல் போலவே திறமையை வெளிப்படுத்த முடியாமல் போன திறமைசாலிகள் சினிமாவிலும் உண்டு. நிஜவாழ்க்கையிலும் உண்டு.

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கிய காலா படத்தில், ரஜினிகாந்த் மகன்களில் ஒருவராக மணிகண்டன் நடித்திருப்பார். இந்த படத்தில் லெனின் என்ற கேரக்டரில் அவரது நடிப்பில் ஒரு தனித்துவம் தெரியும். அந்த கேரக்டரை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்திருப்பார். அந்த படத்தில் மணிகண்டன் நல்ல கவனத்தை பெற்றார். மணிகண்டன், ஏற்கனவே ஸ்கிரிப் ரைட்டராக பல படங்களில் பணிபுரிந்தவர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடிப்பு, படம் பார்த்த அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும். திருட்டு போன நகைகளை, மணிகண்டன் திருடியதாக அவரை சம்மதிக்க வைத்து பொய் வழக்கு போட, போலீசார் அவரை லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள், கண்களில் ரத்தத்தை வரவழைக்கும்.

மிக கொடூரமாக அந்த காட்சிகளில் நடித்த போலீஸ் அதிகாரி, உதவி இயக்குநர் தமிழ், நடிகர் மணிகண்டன் நடிப்பு, அந்த படத்தின் கதையின் தீவிரத்தை, கொடூரத்தை மிக துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கும். அதை கண்டுபிடிக்க வரும் லாயர் சூர்யாவின் பக்குவப்பட்ட, பண்பட்ட நடிப்பும் ஜெய்பீம் போன்ற படங்கள், தமிழ் சினிமாவின் மகத்துவ அடையாளங்களாக நிற்கின்றன என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

அதன்பிறகு குட்நைட் படத்தில், மோட்டார் மோகனாக குறட்டை பிரச்னையில் தவிக்கும் இளைஞராக அசத்தியிருந்தார் மணிகண்டன். இப்போது அவர் நடித்திருக்கும் லவ்வர் படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. படம் குறித்து பாசிட்டிங் ஆன கருத்துகள் பரவி வருகின்றன. இந்த சூழலில், அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய தேடித் தேடி வருகின்றன.

ஆனால், பல படங்களில் நடித்து வளரவேண்டிய இந்த காலகட்டத்தில் நடிக்கும் தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என மறுத்துவரும் மணிகண்டன், இப்போது விஜய் சேதுபதிக்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். விஜய் சேதுபதி, விஜயை போல புதுக்கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அவரும் பிறகு சினிமாவில் நடிக்க வரமாட்டார் என ரசிகர்கள் கிண்டலடித்து வரும் நிலையில், அவருக்காக ஸ்கிரிப் எழுதி, நேரத்தை விரயமாக்கி வருகிறார் மணிகண்டன் என்று கோலிவுட்டில் பரிதாபமாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்