- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், என் பக்கத்துல வராதே… - நடிகர் மாதவனை...

நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், என் பக்கத்துல வராதே… – நடிகர் மாதவனை பார்த்து சொன்ன பிரபல நடிகை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் மாதவன். 1990 காலகட்டத்தில் டீன் ஏஜ் பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர் மாதவன். இவரை செல்லமாக மேகி என்று அழைப்பதுதான் ரசிகர்களின் வழக்கம். இப்போது கோவை விஞ்ஞானி ஜிடி நாயுடு குறித்த பயோபிக் படத்தில் மாதவன் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழில் மாதவன் நடித்த அன்பே சிவம் ரன் தம்பி ரெண்டு நளதமயந்தி மன்மதன் அம்பு அலைபாயுதே ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார்.

- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பேபி ஷாலினி பல படங்களில் 1980 – 90களில் குழந்தையாக சிறுமியாக நடித்தவர். அதன்பிறகு தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பாசில் இயக்கத்தில் வெளியான காதலுக்கு மரியாதை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன்பிறகு மீண்டும் விஜயுடன் கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் ஷாலினி நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் ஷாலினி நடித்தார். தொடர்ந்து நடிகர் அஜீத்குமாருடன் அமர்க்களம் என்ற படத்தில் நடித்தபோது அஜீத்குமாருக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் மாதவனுடன் அலைபாயுதே படத்தில் நடிகை ஷாலினி நடித்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டு வாழும் இளம்ஜோடி பற்றிய திரைக்கதையில் இந்த படம் உருவாகி இருந்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் நடித்தபோது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியதாவது, அலைபாயுதே சூட்டிங்கின் போது, நான் அஜீத்தை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ ரொமான்டிக் சீனில் ஓவரா நடிக்காதே. என் பக்கத்தில் வராமல் தூரமா நில்லு என்று ஷாலினி சொன்னாங்க. நானும் ஹே இங்க பாரு. எனக்கும் சரிதாவுடன் திருமணம் நடக்கப் போகுது. நீயும் பக்கத்தில் வராதே என்று காமெடியாக சொன்னேன். ஆனால் ஷாலினி என்கிட்ட சொன்னபோது அது உணர்வுபூர்வமாக இருந்தது என்று நடிகர் மாதவன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்