- Advertisement -
Homeபொழுதுபோக்குபேசறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க, நீங்க உங்க வேலையை பார்த்துட்டு போயிட்டே இருங்க…- அனுபவப்பட்ட நடிகர்...

பேசறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க, நீங்க உங்க வேலையை பார்த்துட்டு போயிட்டே இருங்க…- அனுபவப்பட்ட நடிகர் மாதவன் சொல்ற அட்வைஸ் இதுதான்!

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டவர் நடிகர் மாதவன். பலரும் மேகி என்றுதான் அழைக்கின்றனர். காதல் படங்களில் நடித்து பெண் ரசிகைகளின் மனம் கவர்ந்தவர். அலைபாயுதே கன்னத்தில் முத்தமிட்டால் மின்னலே ரன் அன்பே சிவம் நளதமயந்தி டும்டும்டும் என பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் பாக்ஸிங் கோச்சராக நடித்த படம் இறுதிச்சுற்று. இந்த படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. அதே போல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் மாதவன் ஜோதிகா ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்த பிரியமான தோழி படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாதவனுக்கு அமைந்தது.

- Advertisement -

இப்போது கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு கதையை படமாக இயக்கி அதில் நாயகனாக நடிக்கிறார் நடிகர் மாதவன். ஏற்கனவே ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார் மாதவன். 2022ம் ஆண்டில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாதவன் கூறியதாவது, நான் இந்தி சீரியல் பண்ணிட்டு இருக்கும்போது அப்போ 1800 எபிசோடு பண்ணிட்டேன். நீங்க ஓவர் எக்ஸ்போஸ் ஆயிட்டீங்க உங்களுக்கு இனி பட வாய்ப்பு கிடைக்காது என்று சொன்னார்கள்.

- Advertisement -

யோவ் நான் நடிகன் ஆகணும்னே வரலே. இப்போதைக்கு காசு வருது அது போதும் என்று நினைத்துக் கொண்டேன். திடீர்னு பார்த்தா தமிழ்ல படம் பண்ணினேன். தமிழில் பண்ணியதால் இந்தியில் படம் கிடைக்காதுன்னு சொன்னாங்க.

தமிழ்ல இருந்து இந்திக்கு போகும்போது தமிழ் ஹீரோ இந்திக்கு வந்துட்டாருன்னு சொன்னாங்க. இங்க என்னடான்னா பாம்பேலிருந்து ஒரு இந்தி ஹீரோ தமிழுக்கு வந்துட்டாருன்னு சொன்னாங்க. அந்த மாதிரி ரூல்ஸ் செட் பண்ணி பேசறவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. நாம நம்ம வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் என்று நடிகர் மாதவன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்