தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த 1980 90களில் அவரது படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. குறிப்பாக சண்டை காட்சிகளில் விஜயகாந்த் மிகவும் ஆக்ரோஷமாக நடித்ததால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
மேலும் பெண்கள் விரும்பும் ஒரு ஹீரோவாகவும் இருந்தார். ஏனெனில் அவரது படங்களில் அம்மா தங்கை கதாநாயகி கேரக்டர்கள் மிகவும் வலுவானதாக இருந்தன. நல்ல பாடல் காட்சிகளும் இருந்தன. அதே போல் தேசப்பற்றும் அவரத படங்களில் காணப்பட்டது. அதனால் விஜயகாந்த் படங்கள் இப்போதும் ரசிக்கப்படும் படங்களாக இருக்கின்றன.
ஆனால் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் இன்னும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க முடியாமல் தனக்கான ஒரு அடையாளத்தை பெற முடியாமல் போராடி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் சண்முகபாண்டியன் சகாப்தம் என்ற படம் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மதுர வீரன் படம் 2018ம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு கடந்த ஆண்டில் படை தலைவன் மற்றும் கொம்பு சீவி என அவர் நடித்த படங்கள் வெளியானது. இதில் எந்த படங்களுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதிலும் 11 ஆண்டுகளில் 4 படங்கள் என்பது ஒரு அறிமுக வளரும் ஹீரோவுக்கு மிகப்பெரிய இடைவௌி என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகர் சண்முக பாண்டியன் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகா்கள் விஜய் விஷால் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் நடிக்க வந்த போது சினிமாவில் அவர்கள் ஒரு முக்கிய இடத்தை பிடித்த அவர்களது அப்பா உறுதுணையாக இருந்தனர். விஜய்க்கு எஸ்ஏ சந்திரசேகர் பல விதங்களில் உதவினார். அதே போல் விஷாலுக்கும் ஜிகே ரெட்டி உதவினார்.
நல்ல இயக்குனர் நல்ல கதை என்று தேர்வு செய்து விஜயை நடிக்க வைத்தார். அடுத்தடுத்து வெற்றி வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். அதே போல் இப்போது தேமுதிக அரசியல் ரீதியாக பெரிய அளவில் உள்ளது. அவர்களே நல்ல படங்களை தயாரிக்க முடியும். நல்ல இயக்குனர்களிடம் சண்முக பாண்டியனை ஒப்படைத்தால் அவர்கள் சண்முக பாண்டியனை நல்ல ஆக்சன் ஹீரோவாக மாற்றி தமிழ் சினிமாவுக்கு தருவார்கள் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.





