- Advertisement -
Homeபொழுதுபோக்குஹேமா கமிட்டி குறித்து மனம் திறந்து பேசிய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அப்பாடா… இப்பவாச்சும்...

ஹேமா கமிட்டி குறித்து மனம் திறந்து பேசிய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அப்பாடா… இப்பவாச்சும் வாய் திறந்தாரே என சந்தோஷப்பட்ட மலையாள திரைத்துறை – என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

- Advertisement -

கேரளா சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களால் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு அடிப்படையில் மிகப்பெரிய ஆணிவேராக அமைந்தது நடிகர் திலீப், காவ்யா மாதவன் இடையே பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தவறான பழக்கமும், உறவும்தான். அதுதான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியாரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு நடிகை காவ்யா மாதவனை காதலித்து அவருடன் நெருக்கமாக இருந்தார். நடிகைகள் மஞ்சுவாரியார், காவ்யா மாதவன் பாவனா ஆகியோர் நெருக்கமான தோழிகளாக இருந்தனர்.

- Advertisement -

ஆனால் மஞ்சுவாரியாருக்கு, அவரது தோழியான காவ்யா மாதவன் நம்பிக்கை துரோகம் செய்தார். இதுகுறித்து மஞ்சுவாரியாரிடம், பாவனா ஆதாரங்களுடன் கூறிவிட்டார். இதனால் திலீப் – மஞ்சுவாரியார் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. இருவரும் பிரிந்தனர். அந்த சூழலில் நடிகர் திலீப், உண்மையை சொன்ன பாவனா மீது ஆத்திரம் கொண்டார். அவரது தூண்டுதலால் ஒரு கும்பல் நடிகை பாவனாவை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது.

இந்த விவகாரம் கேரள சினிமாவில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்கு, கோர்ட் விசாரணை என அது நடந்தது. ஒரு கட்டத்தில் காவ்யா மாதவனை, திலீப் திருமணமும் செய்துக்கொண்டார். மஞ்சுவாரியார் படங்களில் நடித்தும் வருகிறார்.

- Advertisement -

இந்த விவகாரத்தில்தான், 2017ம் ஆண்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி 2019ம் ஆண்டில் அறிக்கை சமர்பித்தது. 5 ஆண்டுகளுக்கு பின் அந்த கமிட்டி விசாரணை வெளிச்சத்து வந்த நிலையில் இத்தனை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாலியல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டிய அம்மா சங்கம் மீது எழுந்த புகாரால் சங்கத்தின் தலைவர் மோகன்லால் ராஜினாமா உள்ளிட்ட நிர்வாக கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டது,

இதுகுறித்து இதுநாள் வரை மௌனம் காத்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கூறுகையில், ஹேமா கமிட்டியின் அறிவுரைகள், ஆலோசனைகளை, தீர்வுகளை நான் வரவேற்கிறேன். நான் முழு மனதுடன் இதை ஆதரிக்கிறேன். காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை தீர்மானிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனியர் நடிகர் மம்முட்டியின் கருத்துக்கு மலையாள நடிகைகள் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்