- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியை கொடுக்கும் மணிகண்டன் அடுத்து யாருடன் இணையப் போகிறார் தெரியுமா... அட...

சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியை கொடுக்கும் மணிகண்டன் அடுத்து யாருடன் இணையப் போகிறார் தெரியுமா… அட இந்த இயக்குனரா… அவர் பலருக்கும் ஃபேவரைட் ஆச்சே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் மிக முக்கியமானவர் மணிகண்டன். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். வெள்ளி திரைக்கு வருவதற்கு முன்னர் குறும்படங்களிலும் அவர் நடித்திருந்தார். இப்படியான சூழலில், காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் முரளி என்னும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

- Advertisement -

அங்கிருந்து தனது வாழ்க்கையை தொடங்கினார் மணிகண்டன். பிறகு விக்ரம் வேதா திரைப்படத்தில், முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலும் மணிகண்டன் நடித்தார். அந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியதும் மணிகண்டன் தான். விக்ரம் வேதா திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அதன் வசனம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மணிகண்டன் பின்னால் இருந்தது பலருக்கும் வியப்பை அளித்தது.

 

- Advertisement -

பிறகு காலா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். இப்படி சில முக்கியமான திரைப்படங்களில் மணிகண்டனை பார்க்க முடிந்தது. இருப்பினும் மணிகண்டனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற திரைப்படம் ஜெய் பீம் தான். அதில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் மணிகண்டன்.

 

சில நிமிடங்களே அந்த கதாபாத்திரம் வந்து போனாலும், அதன் தாக்கம் படம் முழுவதும் இருக்கும். இதற்குப் பிறகு, மணிகண்டனுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது முதல் திரைப்படம் ஆன குட்நைட், மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. குறட்டை தான் பிரச்சனை என்னும் சாதாரண ஒன் லைன்னை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

 

இதில் மணிகண்டனின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் மிக வலுவாக இருந்ததால், குட் நைட் திரைப்படம் கொண்டாடப்பட்டது. இதன் பிறகு எடுக்கப்பட்ட லவ்வர் திரைப்படமும், மணிகண்டனுக்கு நல்ல பெயரையே தந்தது. தற்போது அவர் குடும்பஸ்தன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது.

 

இப்படியான சூழலில் அடுத்ததாக அவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம், தேசிய விருது பெற்று பலரையும் கவனிக்க வைத்தவர் தியாகராஜா குமாரராஜா. பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படமும் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் படம் இயக்கவே இல்லை. இப்படியான சூழலில் தான் அவர் மணிகண்டன் உடன் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்