- Advertisement -
Homeபொழுதுபோக்குநண்பர்கள் எல்லாம் என்னை தெனாலி என்றுதான் கூப்பிடுவார்கள் - நடிகர் மணிகண்டன் சொன்ன சீக்ரெட்!

நண்பர்கள் எல்லாம் என்னை தெனாலி என்றுதான் கூப்பிடுவார்கள் – நடிகர் மணிகண்டன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மிமிக்ரி ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முக திறமைகளை கொண்டவர் மணிகண்டன். காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து ஜெய்பீம் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

வரும் இளம் கதாநாயகனாக உள்ள நடிகர் மணிகண்டன் திரைப்பட இயக்குனராக படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக அவரே ஸ்கிரிப்ட் எழுதும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இதுவரை தொடர்ந்து 3 ஹிட் படங்களை நடிகர் மணிகண்டன் தந்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் மணிகண்டன் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தும் அவர் இன்னும் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை. ரூ. 2 கோடி மட்டும்தான் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கில் வந்து செல்கிறார். உதவியாளராக ஒருவரை மட்டுமே உடன் வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, நண்பர்கள் என்னை தெனாலி என்று கூப்பிடுவார்கள். எதற்கும் தைரியம் இல்லை எனக்கு எல்லாமே பயம் தான். டைரக்டர்கள் நடிக்கப் போகலாம் என சொன்னபோது ஸ்கிரீனில் எப்படி செல்லுபடி ஆவேன் என்று பயந்தேன்.

- Advertisement -

இரண்டாவது மாடியில் இருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும். பறவைகள் செல்லப் பிராணிகளை கண்டால் பயம். தண்ணீர் நீச்சல் குளம் கடல் கனமழை என கண்டாலே எனக்கு பயம். அப்புறம் எனக்கு ஓவர்திங்கிங் பழக்கமும் அதிகம். கண்டபடி நானாக கற்பனை செய்து கொள்வேன் என்றும் நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜெயராம் ஜோதிகா தேவயானி டெல்லி கணேஷ் மதன்பாப் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்த படம் தெனாலி. இதில் இலங்கை அகதியாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கேரக்டரில் கமல் நடித்திருந்தார். எதற்கெடுத்தாலும் பயந்த சுபாவம் கொண்டவராக தெனாலி என்ற கேரக்டரில் கமல் நடித்திருப்பார். எனவே பயந்த சுபாவம் கொண்ட மணிகண்டனை தனது நண்பர்களும் தெனாலி என அழைப்பதாக அவர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்