- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெய்பீம் படத்தில் நான் நடிக்க காரணமே நயன்தாரா தான், பல நாட்களுக்கு பின் உண்மையை சொன்ன...

ஜெய்பீம் படத்தில் நான் நடிக்க காரணமே நயன்தாரா தான், பல நாட்களுக்கு பின் உண்மையை சொன்ன நடிகர் மணிகண்டன்!

- Advertisement -

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் இன்று குடும்பஸ்தன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாசிட்டிவ் விமர்சனங்களால் நடிகர் மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். நடுத்தர குடும்பங்களின் பொருளாதார சிரமங்களை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் மணிகண்டன் நடிப்பில் குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து குடும்பஸ்தன் படமும் பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால் ஹாட்ரிக் வெற்றியை மணிகண்டன் பெற்றுவிட்டதாக திரை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். குடும்பஸ்தன் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைய வாய்ப்புள்ளது.

- Advertisement -

சினிமாவில் நடிகராவதற்கு முன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ரைட்டர், ஸ்கிரிட் ரைட்டர், உதவி இயக்குனர் என பல நிலைகளை கடந்து வந்தவர் நடிகர் மணிகண்டன். குறிப்பாக அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்த படம் காலா. இதில் ரஜினிக்கு 3 மகன்களில் ஒருவராக நடித்திருப்பார்.

அதே போல் தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் பெரிய வரவேற்பை மணிகண்டனுக்கு பெற்றுத் தந்தது. இந்த படத்தில் திருடாத குற்றத்துக்காக லாக்கப்பில் அவரை அடித்து சித்ரவதை செய்து கொன்று விடுவர். சூர்யா நடித்த இந்த படத்தில் மணிகண்டனின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் கூறியதாவது, இயக்குனர் த செ ஞானவேல் சார் மீட்டிங் ஒன்றில் ஜெய்பீம் படத்தின் கதை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நானும் அங்கிருந்தேன். அப்போது நான் அவரிடம் நீங்கள் படம் குறித்து பேச அழைத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.

அப்போது அவர், ஜெய்பீம் படத்தில் இந்த கேரக்டரில் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். ஆனால் அந்த நேரத்தில் நான் நயன்தாராவுடன் அவரது படமான நெற்றிக்கண் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நயன்தாரா அனுமதி கொடுத்து 20 நாட்கள் மட்டுமே நான் நடித்த படம்தான் ஜெய்பீம். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா அனுமதி தந்ததுதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்