நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அதன்பிறகு கடந்த 18 மாதங்களாக அதாவது 1.5 ஆண்டுகளுக்கு மேலாக தனது அடுத்த படத்தை தொடராமல் நடிகர் அஜீத்குமார் தாமதப்படுத்தி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் கார் ரேஸில் மட்டுமே முழுமையான கவனமும் செலுத்தினார்.
இந்த நிலையில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் புதிய படம் டேர் டெவில் என்றும் அந்த படத்தை நடிகர் அஜீத்குமாரே தனது மனைவி ஷாலினி பெயரில் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 2வது முறையாக ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தை இயக்குவது ஏற்கனவே முடிவான ஒன்றுதான்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் டேர் டெவில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதில் அவர் அஜீத்குமாருக்கு அப்பாவாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. அதன்பிறகு பிரண்ட் கேரக்டரில் நடிக்கிறார் என்றனர்.
ஆனால் திடீரென அந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கவில்லை. அந்த படத்தில் இருந்து மோகன்லால் வெளியேறி விட்டார் என்றும் தகவல் வெளியானது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் தயாரிப்பில் பட்ஜெட் செலவில் ரூ. 30 கோடி வரை மோகன்லாலுக்கு சம்பளம் என்பதால் அவர் விலக்கப்பட்டதாக கூறப்பட்டது.
நடிகர் அஜீத்குமாருக்கு இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ. 175 கோடி வரைதான் வியாபாரம் என்பதால் அதற்கேற்ப அவர் படத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொண்டால் மட்டுமே ரூ. 100 கோடி சம்பளமாவது அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அவர் தனக்கு ரூ. 185 கோடி வரை சம்பளம் கேட்டதால்தான் அவரை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
இந்த சூழ்நிலையில் இப்போது மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க வேண்டிய கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அஜீத்குமார் – வெங்கடேஷ் என்ற இந்த நட்சத்திர கூட்டணி அமைந்தால் அது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.





