தமிழ் சினிமாவில் இயல்பான நடிகர் மற்றும் யதார்த்தமான மனிதர் என்றால் அது நடிகர் மன்சூர் அலிகான்தான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக, ஸ்டண்ட் கலைஞராக இருந்த அவரை நடிகராக்கியவர் கேப்டன் விஜயகாந்த் தான். கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தார்.
அதன்பிறகு பல படங்களில் வில்லனாக, சில படங்களில் நாயகனாக நடித்த மன்சூர் அலிகான் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர நடிப்பிலும் அசத்தி வருகிறார். அவரே தயாரித்து படங்களில் நடித்தும் இருக்கிறார். அரசியல், சினிமா, சமூகம் சார்ந்த பல கருத்துகளை வெளிப்படையாக பேசுபவர். இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்ற அரசியல் கட்சி தலைவராகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, நடிகர் விஜய் ஆளுனரை சந்தித்திருக்கிறார். இப்போதுதான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதனால் ஆளுனரை சந்திக்கிறார். லியோ பட விழாவிலேயே விஜயை பாராட்டினேன். நாளைய தீர்ப்பு படத்தில்தான் எஸ்ஏ சந்திரசேகர், விஜயை அறிமுகப்படுத்தினார். நானும் அதில் நடித்திருந்தேன். இப்போது அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆளுனரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்.
போனா போனார்ங்கறீங்க, போகலைன்னா, போகலைங்கறீங்க. வீட்டுலேயே வரவெச்சு உதவி செஞ்சாருங்கறீங்க. அவர் அங்கே போய் 4, 5 பேர் செத்துப் போயிட்டா, நீ ஏன் அங்கே போனே அதனால்தான் 4, 5 பேர் செத்துப் போயிட்டாங்கன்னு கேட்கறீங்க, அப்புறம் நிவாரணம் ஏன் கொடுக்கலைங்கறீங்க. இப்படி பேசுனா என்ன பண்றது. திரிஷா பத்தி மறுபடி எதுக்கு கேள்வி கேட்கறீங்க, அவங்க கொஞ்ச நாள்ல அமைச்சர் ஆயிடுவாங்க. நீ அங்க போய் துணை காரியதரிசியா இரு.
நயன்தாரா தனுஷ் சேர்ந்து நடிச்சிருக்காங்க, தனுஷ் தயாரித்த படத்தில் நயன்தாரா நடிச்சிருக்காங்க. இப்போ தனுஷ் ஹாலிவுட் நடிகராக உயர்ந்துவிட்டார். இதை எல்லாம் பெருசு பண்ணலாமா, 10 கோடி தாம்மா, வெச்சுக்கம்மா போ என்று சொல்லி விடலாம். ஒரு செகன்ட் வர்றதுக்கெல்லாம் காசு கேட்கலாமா.
அப்படி கேட்டா ஒரு தமிழனுக்கு என்ன மரியாதை, தனுஷ் அது எல்லாம் பண்ணக் கூடாது. நயன்தாரா ஏதோ படத்துல வராத சில காட்சிகளை வீடியோ ஆல்பத்துல பயன்படுத்துது. அதை எல்லாம் கண்டுக்காமல் தனுஷ் விட்றணும் என்று நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





